அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தலைமை தாங்கி இருக்கிறார்கள். இந்த கூட்டத்தை பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டத்தை பொருத்தமட்டில் சில என்னென்ன கருத்துக்கள் விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறதுஎன்றால்,

இதில் மிக முக்கியமாக திராவிட கட்சிகளுடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க கூடாது என மாநில தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரம் அந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் நேரடியாக அதிமுக கூட்டணியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி வெளியேற வேண்டும் என மறைமுகமாக தகவல் வெளியிட்டிருக்கிறார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை நேரடியாக பதிவு செய்தனர்.
இதை அடுத்துதான் இந்த கூட்டத்தில் பல்வேறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வானதி சீனிவாசன் இந்த கூட்டணி தொடர்பான விவாகரங்கள் இங்கு பேச வேண்டும். இந்த கூட்டத்தில் அதைப்பற்றி பேசவே அவசியமில்லை என தெரிவித்ததன் அடிப்படையில் மூத்த நிர்வாகி இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் தான் அண்ணாமலை இந்த கூட்டணி தொடர்பாக முடிவுக்காக நான் எனது பதவியை கூட ராஜினாமா செய்து விடுவேன் என கூறியிருக்கிறார்.
