முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றார். அப்போது அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டது. அதன்பிறகு சசிகலா சிறைக்கு செல்ல எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார். அதன்பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் என பேச்சுவார்த்தை அடிபட்டு பின்னர் சசிகலாவை அதிமுகவில் இருந்து கழட்டிவிட்டனர். மேலும் அதிமுக பொதுக்குழு கூடி பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்கப்பட்டது ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை அதிமுக பிரமுகர்கள் பலர் நேரில் சென்று பார்க்கவில்லை ஒரு சில பேர் மட்டும் அவரை வரவேற்றனர் அவரை வரவேற்றவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் இபிஎஸ், ஓபிஎஸ். தற்போது அதிமுகவில் சசிகலா நீடிக்க விரும்பவில்லை என்றால் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால், நாங்கள் அவரை வரவேற்போம். இது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். அவர் கூறிய இந்த விஷயம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
