சென்னை ஆவடி அருகே சாலையின் தடுப்பு கட்டையில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிர் இழந்து உள்ளார்.
நரேந்திரன் என்ற அந்த இளைஞர் அன்னையர் தினத்தை ஒட்டி சொந்த ஊரான அரக்கோணத்திற்கு சென்று தனது தாயை பார்த்துவிட்டு திரும்பிய போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நரேந்திரன் சென்னை கந்தன் சாவடியில் உள்ள ததனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி ஜனனி என்ற மனைவியும் 9 மாத கைக்கு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
