Latest News

“அராஜக திமுக… காவல் நிலையத்தில் வெறியாட்டம்” | திமுகவை வெளுத்து வாங்கிய EPS

திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே என் நேரு மற்றும் திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல்.. திமுக அரசை தாக்கு தாக்கு என தாக்கியிருக்கின்ற எடப்பாடி

திருச்சி எஸ் பி ஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது.

இதனால் டென்னிஸ் அரங்கு திறந்து வைப்பதற்காகவாவது எம்.பி சிவாவை கூப்பிடுங்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து சிவா ஆதரவாளர்கள் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த விழாவின் நிகழ்வு இடத்திற்கு திருச்சி சிவாவின் வீடு இருக்கும் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் கே என் நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டிற்கு முன்பே குவிந்து விட்டனர். அங்கு வீட்டின் முன் பக்கம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது கற்களை வீசி தங்களுடைய கோபத்தை வெளிகாட்டினர்.

மேலும் அங்கு இருந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தும் அடித்து துவம்சம் செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரும், திமுக பகுதிச் செயலாளருமான திருப்பதி என்பவரும் கைது. திருச்சி, நீதிமன்ற அமர்வு காவல் நிலையத்தில் பெண் காவலர் சாந்தியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இவர்களும் தாக்குதல் என இறங்க காவல் நிலையத்தில் இருந்து நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் வீசி உள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற பெண் போலீசார் சாந்தி காயம் அடைந்துள்ளார். சிகிச்சை செய்து பார்த்ததில் அவருக்கு எலும்பு முறிவு என கூறப்பட்டது. இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தினால் திருச்சி சற்று பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் வன்முறையாக வெடித்தது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தன்னுடைய த்விட்டேர் தலத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் “தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Spread the love

Related Posts

IPL 2022 | தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூரு அணி ? | இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போகும் அணி யார் ?

இந்தியா முழுவதும் கோலாகலமாக தொடங்கி கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கும் தொடர்தான் ஐபிஎல் டி20 தொடர்.

Viral Video | கஞ்சா இழுத்த மகனை கம்பத்தில் கட்டி வைத்து மிளகாய் போடி தடவி தண்டனை கொடுத்த தாய் | அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தில் கோடாட் என்ற பகுதியில் 15 வயது சிறுவன் கஞ்சா பயன்படுத்தியதை

Video Viral | “அதிமுகவை சிலர் வீழ்த்த முயற்சிக்கின்றனர்” OPS-க்கு பதிலடி கொடுக்கிறாரா ? EPS | வீடியோ வைரல்

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு சில தினங்களாகவே மும்முரமாக

Latest News

Big Stories