Latest News

இன்ஸ்டாகிராம் காதல் ! கடத்திச்சென்ற மைனர் காதலி விபத்தில் உயிரிழப்பு ! எஸ்கேப் ஆன காதலன் !

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தருவையை சேர்ந்தவர் லாசர் மணி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் 2 மகள்களும் இருந்தனர். லாசர் மணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து தமிழரசி தனது 2 மகள்களுடன் சக்கப்பற்றில் உள்ள ஒரு உறவினரின் பராமரிப்பில் வசித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் விஜூ. 19 வயதான இவர் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. இவர் ஹை எண்ட் மாடல் பைக் ஒன்றை வைத்து இருக்கிறார். இஸ்டாவில் பைக்கை வைத்து அடிக்கடி போட்டோ போடும் இவருக்கு கஞ்சா பழக்கம் தொடங்கி பல போதை பொருள் பழக்கங்கள் இருக்கின்றன. இவர் போடும் பைக் போட்டோக்களை பார்த்து 12ம் வகுப்பு மாணவி அபர்ணா மயங்கி உள்ளார்.

இவர்கள் அடிக்கடி இன்ஸ்டாவில் பேசி நட்பாகி உள்ளனர். அதன்பின் இவர்கள் காதலிக்கவும் தொடங்கி உள்ளனர். இதையடுத்து அடிக்கடி இவர்கள் நேரில் சந்தித்து வெளியே சுற்ற தொடங்கி உள்ளனர். இவர்கள் சந்திக்கும் போதெல்லாம் பைக்கில் வேகமாக செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர். அடிக்கடி கஞ்சா போதையில் இவர் பைக் ஓட்டி வந்துள்ளார். அவரின் காதலியும்.. நான் திருத்துவேன் என்று நம்பிக்கையாக அவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த விஷயம் ஒரு நாள் அந்த மாணவியின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. அதற்கு மாணவி.. நான் காதலிக்க வேண்டாம் என்று சொன்னால் அவன் என் மீது ஆசிட் அடிப்பான். அதனால் நான் சொல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார். இதற்கு விஜூவை நேரில் அழைத்து வந்து அந்த மாணவியின் அம்மா கண்டித்து உள்ளார். இதை கேட்டுக்கொண்டது போல நடித்த விஜூ மறுநாளே மாணவியின் பள்ளிக்கு சென்று அவரை பிக் அப் செய்துவிட்டு பின்னர் லேட்டாக வீட்டிற்கு வந்து விட்டுள்ளார். இவர்களின் காதல் அந்த மாணவியின் அம்மாவின் அனுமதியை மீறி இப்படியே தொடர்ந்து உள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மாணவி அபர்ணாவை திடீரென பைக்கில் அழைத்துக்கொண்டு விஜூ சென்றுள்ளார் .குளச்சல் மேற்கு கடற்கரை சாலை பகுதியில் மிக வேகமாக விஜூ சென்றுள்ளார். 120 கிமீக்கும் அதிக வேகத்தில் இவர் பைக் ஓட்டி உள்ளார்.

இவர் கடுமையான கஞ்சா போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அப்போது கட்டுப்பாட்டை இழந்தவர் சாலை தடுப்பில் மோதி பறந்து இருக்கிறார். பின்னால் இருந்த காதலி சாலை தடுப்பில் இருந்த கம்பியில் படார் என்று மோதி உள்ளார். இதில் சம்பவ இடத்தில் அவரின் காதலி உயிருக்கு போராடி உள்ளார். ஆனால் அவரை கண்டுகொள்ளாதது போல.. அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக எஸ்கேப் ஆகி உள்ளார் விஜூ.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற விஜூ.. அங்கே தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு ஏற்பட்டது விபத்து என்பதால் முறைப்படி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் முடிவில் போலீசார் எப்ஐஆர் பதவி செய்தனர்.

இன்னொரு பக்கம் நெடுஞ்சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மாணவி அபர்ணாவை அப்பகுதி மக்கள் காப்பாற்றி குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து இரண்டு விபத்தும் ஒரே இடத்தில் நடந்ததை வைத்து விஜூவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. இதையடுத்து விஜூ மீது விபத்து ஏற்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

Spread the love

Related Posts

தொப்புள் தெரிய போட்டோவை பதிவேற்றி இளசுகளை கட்டி போட்ட இளம் நடிகை ரைசா

பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன் தொப்புள் தெரியும் வகையில் ஒரு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். பெங்களூருவில்

பிரபல இசையமைப்பாளர் காலமானார்

பிரபல ஜேம்ஸ் பாண்ட் தீம் மியூசிக்கை இசையமைத்த மாண்டி நார்மன் காலமானார் இவருடைய வயது 94

விஜய் அண்டனிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன கனெக்க்ஷன் ? | வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்

2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் ஒன்று வந்த போது வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பிச்சைக்காரன்

Latest News

Big Stories