“இப்போ இப்டி கேப்பிங்க அப்பறோம் ஆணுறை கேப்பிங்க….” சானிட்டரி நாப்கின் விலை குறைக்க சொன்ன மாணவியிடம் சர்ச்சையாக பேசிய பெண் அரசு அதிகாரி

பாட்னாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மாணவியிடம் ஆணுறை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார் ஒரு பெண் அரசு அதிகாரி.

பாட்னாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சங்கத்திற்கு சம்பந்தப்பட்ட ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல தலைவர் கலந்து கொண்டார். அவர் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியும் கூட. அவரிடம் அப்போது ஒரு மாணவி எழுந்து 25 ரூபாய் 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் கிடைக்கும் அளவிற்கு செய்ய முடியுமா என கேட்டார். அதற்கு வெகுண்டெழுந்து பதில் அளித்த அந்தப் பெண்மணி தற்போது சானிடரி நாப்கின் கேட்பீர்கள் அதற்குப் பிறகு ஜீன்ஸ் பேண்ட் கேட்பீர்கள் அதற்குப் பிறகு அழகாக ஷூக்கள் கேட்பீர்கள். கடைசியாக குடும்ப கட்டுப்பாடு ஆணுறைகள் பற்றி கேட்பீர்கள் இதெல்லாம் அரசாங்கம் உங்களுக்கு வழங்க வேண்டுமா என கராராக பதிலளித்தார்.

“திருமணம் ஆகாத பெண்கள் கரு கலைக்க உரிமை உண்டு” உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு

இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அதோடு விடாமல் வேறு ஒரு கேள்வியும் கேட்டார். அப்போது நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் அல்லவா நீங்கள் இப்படித்தான் பேசுவீர்களா என கேட்டதற்கு அப்படியா அப்போது ஓட்டு போடாதீர்கள் எல்லாவற்றையும் ஓட்டு போட்டால் சாதித்து விட முடியும் என்று எண்ணுகிறீர்கள் என்று அதற்கும் குதர்க்கமாகவே பதில் அளித்தார் அந்த பெண்மணி.

அதனால் சற்று நேரம் அந்த கருத்தரங்கமே ஆடிப் போனது. அந்த கருத்தரங்கில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்பு மாணவிகள் தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்த பதிலை கேட்டதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ வைரலாக ஷேர் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மாணவிகள் இருக்கும் கருத்தரங்கில் இப்படி பேசுவது நல்லதல்ல என கூறி அவர் மீது விமர்சனங்களை அடுக்கினர்.

மேலும் கேரளாவில் சானிட்டரின் நாப்கின்கள் இலவசமாக கொடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட நம் நாட்டில் இந்த மாதிரி ஒரு கேள்விக்கு எப்படி கீழ் தரமான பதில் அளிப்பது நல்லதல்ல எனவும் கூறி வருகின்றனர். அதற்கு பதில் அளித்த அந்த பெண்மணி என் மீது வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க இப்படி வீடியோவை பரப்புகின்றனர் என்று கூறி தன் பக்கம் நியாயம் இருப்பது போல பேசியது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

வலிமை படத்தை விட அதிக வசூல் ஈட்ட காத்திருக்கும் பீஸ்ட் | KGF படம் சவாலுக்கு வந்தாலும் எந்த பயமும் இல்லை

இப்போது கோலிவுட்டில் டாக் ஆஃ தே டவுன் ஆக இருப்பது தளபதி விஜய் அவர்களின் பீஸ்ட்

ஆயிரம் கோவில் கட்டுவதை விட நடிகர் சூரி அடித்த அந்தர் பல்டி சர்ச்சை பேச்சுக்கு சூரி மக்களிடம் மன்னிப்பு ?

ஆயிரம் கோவில்கட்டுவதை விட ஒரு குழந்தையை படிக்கவெக்கறது பல ஜென்மம் பேசும் என நடிகர் சூரி

படத்தில் “ஆமை” என வசனம் வைத்து அஜித் ரசிகர்களை மறைமுகமாக பீஸ்ட் படத்தில் கலாய்த்த விஜய் | அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமார் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம்தான் பீஸ்ட். இந்த