தமிழ் ராக்கர்ஸ் வெப்சிரிஸில் குக் வித் கோமாளி அஸ்வின் குமாரை இயக்குனர் அறிவழகன் கலாய்த்ததாக செய்திகள் சமூக வலைதளம் எங்கும் பரவியது. இதற்கு தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அஸ்வின் குமார் அவர்கள் அறிவழகனை வசைப்பாடி ஒரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறியப்பட்டவர் தான் அஸ்வின் குமார். அந்த நிகழ்ச்சி மூலமாகவே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். அந்த ரசிகர்களுடைய பலத்தை வைத்துக்கொண்டு சினிமாவிலும் களமிறங்கினார் அஸ்வின் குமார். அவரோடு சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்காற்றிய சிவாங்கி மற்றும் பவித்ரா லட்சுமி புகழ் ஆகியோரும் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

இப்போது இவர்கள் முன்னேற குக் வித் கோமாளி ஒரு அடித்தளமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் மிகவும் ட்ரெண்டானார்கள். அந்த வகையில் என்ன சொல்ல போகிறாய் என்னும் படத்தில் கமிட் ஆகி நடித்த அஸ்வின் குமார் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். அதனால் இவர் பெயரை எடுத்தாலே பலரும் நெகட்டிவாக தான் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் அறிவழகன் இயக்கத்தில் அண்மையில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப்சிரிஸ் சோனி லைவ் ott தலத்தில் வெளியானது. அதில் ஆங்காங்கே அஸ்வினை கலாய்ப்பது போல சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு இயக்குனர் அறிவழகனுக்கு பதிலடி தர வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அஸ்வின் அதில் தாங்கள் அறிவு அழகு (Brain Beauty) கிடையாது அறிவு இல்லாத அழகு (Brainless beauty) என்று மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்… சார் ரிவியூ பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என மறைமுகமாக இயக்குனர் அறிவழகனை தாக்கி இருக்கிறார் அஸ்வின். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தை சுற்றி வருகிறது.
Ak அஸ்வின் சரமாரியாக தாக்கப்பட்டார். #Varisu pic.twitter.com/GnQ8gw9OgM
— 彡𝗠𝗿 𝗕𝗲𝗮𝘀𝘁 𝗧𝗿𝗼𝗹𝗹𝘀⚡️ (@Mr_Beast242) August 21, 2022