பாலிவுட் படம் ஒன்றில் நடித்தபோது ஆடைகளை அகற்றிவிட்டு உள்ளாடையை காட்டுமாறு இயக்குனர் தன்னை வற்புறுத்தியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
தமிழில் கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதை அடுத்து பாலிவுட் சென்று அவருக்கு அங்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்ததால் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்தியாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. தற்போது அவருக்கு ஹாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அண்மையில் இவர் நடித்த சீட்டாடல் என்கிற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா அரை நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனிடையே சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் இயக்குனர் பற்றி பகிர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகை பிரியங்கா சோப்ரா சினிமாவில் அறிமுகமான 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்ததாம்.
அப்போது பாலிவுட் படம் ஒன்றில் ரகசிய ஏஜெண்டாக நடித்து வந்தாராம். அப்போது ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டதால் அந்த காட்சியில் நடிகருடன் நெருக்கமாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்புக்கொண்ட பிரியங்காவை அப்படத்தின் இயக்குனர் நீ உள்ளாடையுடன் மட்டுமே நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார். அப்போது தன்னுடைய ஸ்டைலிஸ்ட்டை அழைத்து என்னுடைய ஆடையை கழற்றி உள்ளாடையை காட்ட சொன்னதாகவும் அதை பார்க்க தான் ரசிகர்கள் ஆசைப்படுவதாகவும் அன்று கொச்சையாக பேசியதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இயக்குனரின் விருப்பப்படி உள்ளாடையுடன் நடித்த பிரியங்கா சோப்ரா இரண்டு நாட்கள் மட்டும் நடித்த நிலையில் இந்த படமே தேவையில்லை இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று அப்படத்தில் இருந்து விலகி விட்டாராம். இயக்குனரின் அந்த செயல் தனக்கு மனிதாபிமானம் அற்றதாக தெரிந்ததாக நடிகை பிரியங்கா சோப்ரா மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.