பிரபல டைரக்டர் விக்ரமன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திடிரென்று காணாமல் போனதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழ்த்திரையுலகில் Feel Good Movie இயக்குனர் என்று பெயர் வாங்கிய பிரபல டைரக்டர் விக்ரமன் சூரியவம்சம், புதுவசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர் சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் வசித்து வருகிறார்.

விக்ரமனின் நெருங்கிய உறவினர் பெண் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த ருக்குமணி என்பவர். இவர் அடிக்கடி இயக்குநர் விக்ரமன் வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து செல்வது வழக்கம்.
அப்படித்தான், கடந்த 3 ம் தேதி காலை 9.30 மணியளவில் ருக்குமணி, விக்ரமன் வீட்டுக்கு, தன்னுடைய டூவீலரில் வந்துள்ளார்.. பிறகு காலை 11 மணியளவில் ருக்குமணி வீட்டுக்கு திரும்பி செல்வதற்காக பைக்கை எடுக்க வெளியே வந்தார்.. அப்போது, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது வாகனம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. பிறகு விக்ரமனிடம் இதை சொல்லவும், அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தார்.. அப்போது, 2 இளைஞர்கள் சட்டையால் முகத்தை மூடி வந்து பைக்கை திருடி செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து ருக்குமணி குமரன் நகர் போலீசில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக தந்துள்ளார்.. ஆக்டிவா ஸ்கூட்டரின் நம்பர் ((Honda Activa – brown colour – TN09CD0252)).. புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள விக்ரமன், “நேற்று முன்தினம் என் உறவினர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். காலை 9.30 மணிக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில் வந்தார்கள். வீட்டிற்கு வந்து என் மனைவியை பார்த்துவிட்டு திரும்பி வெளியே சென்றபோது ஸ்கூட்டரை காணவில்லை.

அருகில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது 2 நபர்கள் சட்டையால் முகத்தை மறைத்தபடி வந்து பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டரை உடைத்து திருட்டுத் தனமாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது” என்றார். மேலும் போலீஸ் கண்டுபிடித்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தெரிவித்தார்.