ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தற்போது செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த 15ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 15ஆம் தேதி மாலை 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை ஆனது அளிக்கப்பட்டிருந்தன. மருத்துவ குழு அவருக்கான பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தற்பொழுது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையினுடைய அறிக்கையானது வெளிவந்திருக்கிறது.
அவர் தற்பொழுது நலமுடன் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் ஐசியூவின் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கையாக தற்பொழுது வந்திருக்கிறது. இதய நோய் பாதிப்பு காரணமாக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுக்கான அந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சில தினங்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என இதன் மூலமாக தெரிய வருகிறது.
