உடைந்த பாஜக கூட்டணி? அதிருப்தியில் அண்ணாமலை, மெகா கூட்டணி எடப்பாடி எந்தக்கட்சிகளை குறிவைத்துளார் தெரியுமா ?

அமிட்ஷாவை சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் விழ தொடங்கிருப்பதற்கான அறிகுறி என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.. மழை வெல்ல பாதிப்புக்களை பார்வையிட்ட பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது சமீபத்தில் தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை சந்திக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி எங்க கட்சி வேற அவங்க கட்சி வேற பிரதமர் ஏதாவது அரசு நிகழ்ச்சிக்கு வந்தால் நான் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சென்று பார்க்கலாம் தனிப்பட்ட நிகழ்ச்சியில் அமிட்ஷா கலந்துகொண்டால் ஏன் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை என கேட்கிறார்கள், அவர் தேசிய கட்சி நாங்கள் மாநில கட்சி எங்களுக்கு எதாவது வாய்ப்பு வந்தால் போயி பாப்போம் இல்லையென்றால் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என பேசியிருந்தார்.

அதேபோல சமீபத்தில் ஈரோடு மாவட்டம் பவானி சாதரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான செங்கோட்டையன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் தனித்து நிற்கமுடியும் தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்த காட்சியையாவது சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம் அதற்க்கு அதிமுக வாக்குவங்கி அப்படியே இருப்பதுதான் காரணம், அதிமுக கூட்டத்தை கூட்டினால் நம்முடன் எந்தக்கட்சியும் போட்டியிடமுடியாது, நம்மை யாராலும் வீழ்த்தமுடியாது என்றும் பேசி இருந்தார். இவருடைய இந்த பேச்சுக்கள் அதிமுக பாஜக கூட்டணி விரிசலின் தொடக்கமாகவே கருதப்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் பிரிவது பாஜக தலைமை விரும்பவில்லை என்றும் இந்த பிரிவு நடந்துவிடாமல் இருப்பதற்காக தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருவதாகவும் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக நடவடிக்கைகளால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தி அடைந்திருப்பதின் வெளிப்பாடு தான் இந்த பேச்சுக்கள் என்று கூறிவருகிறார், அதோடு நாடாளுமன்ற தேர்தலில் அமையவிருக்கும் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதையும் குறிப்பிட்டு கொண்டிருக்கின்றனர். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என சொல்லுகிறார் தவிர அதில் பாஜக இருக்கிறதா என சொல்லாமல் தேர்தல் வரும் சமையத்தில் பார்க்கலாம் என சொல்லுகிறார். இதில் அதிமுகவினர் வேறு கணக்கினை வைத்திருப்பது யூகிக்கமுடிகிறது.

Spread the love

Related Posts

கலகலப்பு பட பாணியில் நகைகளை திருடிவிட்டு வெளியே செல்லும்போது ஓட்டையில் மாட்டிக்கொண்ட திருடன் | வேடிக்கையான வைரல் வீடியோ

கலகலப்பு படத்தில் மிர்சி சிவா நகைகளை திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு ஓட்டையில் மாற்றிக்கொள்வார்.

x