உலகிலேயே பெரிய இந்து கோயில் கட்ட முஸ்லிம் குடும்பத்தினர் 2.5 கோடி நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
உலகிலேயே மிகப்பெரிய இந்து கோவிலை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை பாட்னாவை சேர்ந்த மகாவீர் மந்திர் அறக்கட்டளை தலைவர் ஆச்சரியா கிஷோர் குணால் வெற்றிகரமாக செய்து.
பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கைத்வாலியா பகுதியில் “விராட் ராமாயண் மந்திர்” என கோயில் அமைந்துள்ளது. கம்போடியாவில் 200 ஆடிக்கு மேல் உயரமுள்ள உலகப் புகழ்பெற்ற மற்றும் 12-ம் ஆண்டில் கட்டப்பட்ட அங்கோர்வாட் வளாகத்தை விட உயரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்போது பீகாரில் அதை விட மிகப்பெரிய இந்து கோவிலை கட்ட 2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நன்கொடையாக கொடுத்துள்ளனர்.
இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்த அறக்கட்டளையின் தலைவர் ஆச்சர்யா “நிலத்தை நன்கொடையாக தொழிலதிபர் இஸ்தியாக் அகமதுகான் வழங்கியுள்ளார். இது சமூக நல்லிணக்கம் மற்றும் இரு சமூகங்களுக்கும் இடையே சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்து சொல்ல ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது, என அவர் தெரிவித்தார்.