புதுச்சேரியில் மாணவன் ஒருவன் என்னுடைய இறப்பிற்கு போலீசார் காரணம் என வீடியோ பதிவிட்டு இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாவட்டம் வில்லியனூரில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் விஷ்ணுகுமார் இவர் தன்னுடைய வகுப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்து பைக்கை எடுத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள பத்து கண்ணு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே ஒரு ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார். இதுகுறித்து அந்த ஸ்கூட்டர் ஊட்டி வந்த பெண்மணி போலீசில் புகாரும் அளித்தார். போக்குவரத்து காவல் நிலைய உதவி சப்இன்ஸ்பெக்டர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் பேசியிருக்கிறார்.
ஆனால் அதற்கும் ஒத்து போகாத அந்த பெண்மணி கோர்ட்டில் இது குறித்து புகார் கூறியிருக்கிறார். அதனால் நீதிமன்றத்தில் இருந்து மாணவன் வீட்டிற்கு மூன்று லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பிஉள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக எப்படி நம்மால் 3 லட்சம் கொடுக்க முடியும் என்று எண்ணி வீட்டிலிருந்த எலி மருந்தை உட்கொண்டு மயங்கி விழுந்திருக்கிறார. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இவரை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கே அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவரின் செல்போனில் அவர் இறப்பதற்கு முன்பு என்னுடைய சாவிற்கு போலீசும் அந்த பெண்மணிகள் தான் காரணம் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறிய போது நான் லேசான விபத்தை தான் ஏற்படுத்தினேன். ஆனால் இதனை பெரிதுபடுத்தி என்னிடம் மூன்று லட்சம் கேட்கிறார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் என அந்த மாணவன் அதில் கூறியிருக்கிறார்.
