பாஜகவை சேர்ந்த மாவட்ட தலைவர் ஒருவர் லாட்ஜில் ரூம் போட்டு ஒரு பெண்ணுடன் சல்லாபத்தில் இருக்கும் போது அந்த பெண் அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் பாஜக தலைவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக் என்பவர் பாஜக பெண் நிர்வாகி ஒருவரை படுக்கை அறைக்கு அழைத்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ ஓட்டலில் அறையில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் அந்த வீடியோவில் ஸ்ரீகாந்த் என்னை ஏமாற்றிவிட்டார். திருமணமானவர் என்னுடன் தொடர்பில் இருந்துள்ளார். தற்போது என்னிடம் கேமராவை பிடிங்கி கொண்டார் என்றும் கூறுகிறார். இந்த வீடியோ அந்த பெண்ணால் எடுக்கப்பட்டது. வீடியோ வைரலானதை அடுத்து ஸ்ரீகாந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆனால் ராஜினாமா செய்வதற்கான காரணத்தை அந்த கடிதத்தில் அவர் தெரிவிக்கவில்லை. அவரது ராஜினாமா கடிதத்தையும் பாஜக மாநிலதின் பாஜக தலைவர் ஏற்று கொண்டுள்ளார். இந்த நிலையில் வைரலான அந்த வீடியோவில் உள்ள அந்த பெண் ஸ்ரீகாந்த் மீது மோசடி புகார் ஒன்றையும் வைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தரப்பிலும் அந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் என்னை பிளாக்மெயில் செய்து அந்த பெண் இரண்டு கோடி கேட்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு புகார் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.