“என் மீது குற்றம் கூறும் பிராடுகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது” என பாஜக பிரமுகர்களை திட்டிய நடிகை காயத்ரி ரகுராம்

என் மீது குற்றம் கூறும் பிராடுகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்று பாஜக பிரமுகரை திட்டிய நடிகை காயத்ரி ரகுராம்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் ஆன காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் அண்ணாமலை. மேலும் 6 மாத காலத்திற்கு கட்சியில் இருக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக கூறியிருந்தனர்.

இதற்காக அவர் தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சித் தலைமை என்னை நீக்கி உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து அந்தக் கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள சொமேர்செட் ஓட்டலில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து ஒரு மணி நேரமாக பேசியுள்ளார்.

துரோகிகளுக்கு பாஜகவில் எப்போதுமே இடமில்லை என இந்த பதிவினை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த காயத்ரி ரகுராம் இதற்கு பதில் அழைத்துள்ளார் அதாவது “முட்டாளே என்னுடைய நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு நான் சென்றேன். அப்போது எதிர்பாராத விதமாக அங்கே சபரிசனை சந்திக்க நேர்ந்தது. சபை நாகரிகத்தின் அடிப்படையிலேயே நான் பேசி இருக்கிறேன். ஒருவரை பார்த்ததும் பார்க்காதபடி செல்லும் அளவிற்கு என்னால் இருக்க முடியாது. எனக் கூறிய அவர் சிறிது நேரத்திலேயே அந்த பதிவை டெலிட்டும் செய்துள்ளார்.

அதன் பிறகு புதிய பதிவை ஒன்று போட்டுள்ள காயத்ரி ரகுராம் அவர்கள் முட்டாள்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. தொடர்ந்து முட்டாள்கள் விளக்கம் அளிக்க அவர்கள் தகுதியற்றவர்கள் எனவும் கூறியுள்ளார். எனது நட்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களின் கருத்து மூலமாகவே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் என்று இப்படியாக காயத்ரி அவர்கள் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

உதயமாகிறது தங்க சிலையுடன் சமந்தாவிற்கு கோவில் … மாஸ் காட்டும் ஆந்திர ரசிகர்

நடிகை நயன்தாராவுக்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சமந்தாவின் பெயரில் ஒரு கோயில் உருவாகிறது. சமீபத்தில்

முழுநேர அரசியல் குதித்தார் விஜய் ! சென்னையில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை !

நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள தனது இல்லத்தில் 234 தொகுதி மக்கள் இயக்க நிர்வாகிகளுடன்

“ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் பாஜகவையும் நாங்கள் எதிர்ப்போம்”- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு பேட்டி

இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் பாஜக அரசையும் எதிர்ப்போம் என மன்னார்குடி ஜீயர் பரபரப்பாக

Latest News

Big Stories