சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி தடம்புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது இந்த, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர். சென்னை ஏர்ப்போர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் அறிவுறுத்தலின்படி ரயில் விபத்து குறித்து விவரம் விசாரிக்க அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் அங்கு செல்கிறோம். ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். வருந்தத்தக்க செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

விபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. அங்கு சென்றவுடன் உங்களுக்கு மேலும் தகவல்களை தருகிறேன். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ மருத்துவமனை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
