பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர் கோபிநாத் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கரூர் மாவட்டம் பழைய ஜெயம்கொண்டான் 3வது வார்டில் பாஜகவுக்கு ஆதரவாக நின்ற வேட்பாளர் கோபிநாத் அவர்கள் வெறும் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அந்த வார்டின் திமுக அதிமுக வேட்பாளர்களை அவர் தோற்கடித்துள்ளார். அந்த வார்டில் அவர் 174 வாக்குகளைப் பெற்று, இரண்டாவது இடத்தில் திமுக 173 வாக்குகளை பெற்றது. மேலும் அதிமுக வெறும் ஐந்து வாக்குகளை மட்டுமே அந்த வார்டில் பெற்றுள்ளது.