நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரை உடலை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காணலமானார். காலை மருத்துவமனையிலிருந்து சைதாப்பேட்டையில் உள்ள நடிகை மீனாவின் வீட்டிற்கு உடல் எடுத்து வரப்பட்டு. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. காலை முதலே நடிகை ரம்பா குடும்பத்தினர் அதேபோன்று முன்னணி சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். அதேபோல நடிகர் ரஜினிகாந்த் பிரபு தேவா போன்றோரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

தற்போது மின்மயானத்திற்கு கொண்டு போக இருக்கும் அவரின் உடலை பார்த்து கடைசியாக ஒரு முறை முத்தம் கொடுத்து கண்ணீர் மல்க தனது சோகத்தை வெளிப்படுத்தினர் நடிகை மீனா. மேலும் அவரும் அழுதுகொண்டேய கணவரை தகனம் செய்ய மின் மாயணத்திற்கு சென்றுள்ளார்
