இளையராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு மோடிக்கு ஆதராவாக பேசிய நிலையில், இன்று யுவன் சங்கர் ராஜா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு வெட்டி மற்றும் கருப்பு டீ-ஷர்ட் போட்டு ஒரு போட்டோ ஒன்றை பதிவேற்றி இருக்கிறார் இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா அவர்கள் சிறிது நாட்களுக்கு முன்பு அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசினார். “அம்பேத்கர் இந்த காலகட்டத்தில் வாழ்ந்து இருந்தால் நரேந்திர மோடியின் ஆட்சி திறனைப் பார்த்து அவர் பெருமைப்பட்டுக் இருப்பார்” என்று கூறியிருந்தார் இதற்கு கடும் கண்டனங்கள் இளையராஜாவுக்கு எழுந்தது.

நீங்கள் என்னதான் ஒரு இசையமைப்பாளராக இருந்தாலும் நீங்கள் சொல்வதை எல்லோரும் ஏற்பார்கள் என்று எண்ணி விடாதீர்கள் என எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானார் இளையராஜா. தற்போது அவரின் மகனான யுவன்சங்கர் ராஜா கருப்பு வேட்டி, கருப்புச் சட்டையுடன் ஒரு போட்டோவை போட்டு கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என கேப்ஷன் போட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை ? | அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி படுத்த உள்ளதாக தகவல்
இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பா மோடியை பற்றி ஆதரவாக பேசிய நிலையில் அணைத்து காவி அரசியல் அமைப்பினரும் இளையராஜாவுக்கு ஆதரவு கரம் நீட்டினார். தற்போது அடுத்த கணமே அவரது மகன் யுவன் சங்கர் ராஜா திராவிட அரசியலுக்கு ஆதரவாக இந்த போஸ்ட்டை போட்டது அனைவரிடமும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஒரே வீட்டில் இருவேறு அரசியல் கொள்கைகளை உடைய நிறைய குடும்பங்களை நாம் பார்த்திருக்கிறோம், இது எங்கு சென்று முடிய போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
