சர்ச்சைகளுக்கு எப்போதுமே பெயர் போன ஒரு நடிகை தான் நடிகை வனிதா. இவர் தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போல ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம்தான் மாஸ்டர். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் சேவியர் பிரிட்டோ. இவருக்கு அடுத்து படங்களை தயாரிக்க முன்வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் இவர் இயக்கும் இரண்டாவது படத்தின் பெயர்தான் வாசுவின் கர்ப்பிணிகள். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தை இயக்கிய மணி நாகராஜ் இயக்குகிறார்.
“என்னோட கணவருக்கு ரொமான்ஸ் செய்யவே வராது” | நேர்காணலில் ஓப்பனாக பேசிய நடிகை குஷ்பூ

மேலும் இந்த படத்தில் நடிகைகள் வனிதா, சுஜா வருணி, பேபி அனிகா, நீயா நானா கோபிநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அதில் நடிகை வனிதா கர்ப்பமாக இருப்பது போன்று இருக்கின்றது.

மேலும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பல்லவி என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் கதை கர்ப்பிணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இந்த படத்திற்கு வாசுவின் கர்ப்பிணிகள் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள நாம் படம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். மேலும் நடிகை வனிதா திடீரென்று இப்படி கர்ப்பமாக இருக்கும் ஒரு ஃபர்ஸ்ட் லுக் விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.