Latest News

கவாச் சிஸ்டம் மட்டும் கோரமண்டல் ரயிலில் இருந்திருந்தால்.. விபத்தே நடந்திருக்காது.. அது ஏன் இல்லை மக்கள் கேள்வி ?

கவாச் சிஸ்டம் என்ன ஆனது. கோரமண்டல் ரயிலில் இருந்ததா, டெல்லி தூரந்திரோ ரயிலில் இருந்ததா என்ற கேள்விகள் எழுகிறது.ஒருவேளை கவாச் சிஸ்டம் சரியாக செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ரயில்களில் இருந்திருந்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்..

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி 233 பேர் பலியாகி உள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து நடந்ததற்கு ஒரே டிராக்கில் இரண்டு ரயில்கள் வந்தது காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்களில் கவாச் என்று சிஸ்டம் கடந்த ஆண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சிஸ்டம் ஒரே டிராக்கில் இரு ரயில்கள் வந்தால் ரயில்கள் விபத்தில் சிக்காமல் காப்பாற்றும். இந்த சிஸ்டம் கோரமண்டல் ரயிலில் இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கவாச் (Kavach) என்பது இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவியாகும். இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கவாச்’ கருவியாகும். இது கடந்த ஆண்டு செகந்திராபாத் (ஹைதராபாத்) ரயில் நிலையத்தில் சோதனையும் செய்யப்பட்டது. இதற்காக இயக்கப்பட்ட இரு ரயில்களில் ஒன்றில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், மற்றொரு ரயிலில் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. திரிபாதியும் பயணம் செய்தும் காட்டினார்கள்.

தெற்கு மத்திய ரயில்வேயில் குல்லாகுடா-சிட்கிட்டா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த பரிசோதனையும் அப்போது மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரண்டு ரயில் என்ஜின்கள் எதிரெதிரான திசையில் வருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இந்த என்ஜின்களில் பொருத்தப்பட்ட கவாச் விபத்து தடுப்புக் கருவி தாமாகவே செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பே இரண்டு என்ஜின்களையும் நிறுத்தி விடப்பட்டது.

இதே போல் சிவப்பு சமிக்ஞை விளக்கு வரும்போது ஓட்டுநர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே கவாச் கருவி என்ஜின் செயல்பாட்டை நிறுத்தி அசத்தியது. இணைப்புப் பாதைகள் வரும்போது ரயிலின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைத்தும் காட்டியது. இந்த திட்டத்தை பலரும் பாராட்டினார்கள். 2022-23-இல் 2,000 கி.மீ. ரயில் பாதை கவாச் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்று அப்போது ரயில்வே அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் கவாச் சிஸ்டம் என்ன ஆனது. கோரமண்டல் ரயலில் இருந்ததா, டெல்லி தூரந்திரோ ரயிலில் இருந்ததா என்ற கேள்விகள் எழுகிறது.ஒருவேளை கவாச் சிஸ்டம் சரியாக செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ரயில்களில் இருந்திருந்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே சொல்கிறார்கள்.

Spread the love

Related Posts

உடனடியாக உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேறுங்கள் | இந்திய அரசு வெளியிட்ட பரபரப்பு ரிப்போர்ட்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தற்போது போர் நடக்கவிருக்கும் காரணத்தால் இந்தியர்களை அங்கிருந்து வெளியேறும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

கருப்பு நிற ஆடையில் ஆளை மயக்கும் கவர்ச்சியுடன் நடிகை ஜான்வி வெளியிட்ட போட்டோ | மேலும் போட்டோக்கள் உள்ளே

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மும்பையில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட போது

புது பட ரிவியூ | தனுஷின் மாறன் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன் போன்றவர்கள்

Latest News

Big Stories