சென்னையில் காதலி பேச மறுத்ததால் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் சாலை பகுதியைச் சேர்ந்த தீபிகா மாதவரத்தைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.

ஜசேகரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் 2022 ஆம் ஆண்டு தீபிகா காதலிப்பதை நிறுத்திக்கொண்டு பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும் தீபிகாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ராஜசேகர் அவர் பணிபுரியும் மத்திய அரசுக்கு சொந்தமான பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை அருகே சென்று தீபிகாவிடம் தகராறில் ஈடுபட்டு தலை முடியை பிடித்து இழுத்து தாக்கவும் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தீபிகாவும் திரும்பத் தாக்கியுள்ளார்.
