மார்ச் மாதத்திற்குள் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி, 7 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 274 ரூபாய் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், வணிக வரித்துறை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டி மார்ச் மாதத்திற்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.