நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் தான் பீஸ்ட். இந்த படம் சூட்டிங் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தது. அது முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி தணிக்கை சான்றிதழை பெற்று ரிலீஸ் தேதியை அறிவித்து விடலாம் என்று முடிவு செய்து ரிலீஸ் தேதியுடன் ஒரு புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் தளபதி விஜய் அவர்கள் கையில் துப்பாக்கியுடன் கம்பீரமாக உட்கார்ந்து இருப்பது போல ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டனர். மேலும் போஸ்டரில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். இப்போது இந்த திரைப்படத்தின் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வந்ததையடுத்து தளபதி ரசிகர்களும் மற்ற நடிகர் ரசிகர்களும் படத்திற்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் 2 படமும் வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் ஏகப்பட்ட வரவேற்பு மக்களிடையே இருந்துவருகிறது. அதனால் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாக உள்ளதால் இதில் எந்த படம் வெல்லப் போகிறது என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.