திருநெல்வேலியில் பள்ளி மாணவன் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் அந்த படுக்கையிலேயே பப்ஜீ கேம் விளையாடுவது போல கையை வைத்துக்கொண்டு துப்பாக்கி சுடுவது போலும் பட்டனை அழுத்துவது போலும் பப்ஜி கேம் விளையாட்டை கற்பனை செய்து கொண்டே கை அசைத்தபடி விளையாடினான், இதைக் கண்ட பெற்றோர் மனவேதனை அடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் செல்போன்கள் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இந்த செல்போனில் அவர்கள் கேம்களை இன்ஸ்டால் செய்து அதை நாள் கணக்கில் ஒரே இடத்திலேயே அமர்ந்தபடி விளையாடி வருகிறார்கள். இதில் ஒரு முக்கியமான கேம் என்றால் அது pubg தான் அனைத்து இளைஞர்களும், மாணவர்களும் மதுவுக்கு, போதை பொருளுக்கு அடிமை ஆவதை போன்று இந்த கேம் களிலும் அடிமை ஆகின்றனர். அடிக்கடி ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை வேறு எந்த வேலையும் செய்யாமல் தகுந்த ஓய்வும் இல்லாமல் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கட் அடித்து விட்டு இது போன்று கேம் களை விளையாடுகின்றனர்.



இந்த விளையாட்டின் போது அவர்களே அவர்களுக்குள் கமெண்டரி செய்து அப்படி போ, இப்படி போ, இவனை சூடு என்று ஏகப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி கொள்கிறார்கள். சில சிறுவர்களை இந்த ஆட்டம் இரவு நேர துக்கத்திலும் கையில் செல்போன் இல்லாமல் தானாகவே கை அசைக்க வைக்கிறது. இப்போது இதுபோன்று ஒரு சம்பவம் திருநெல்வேலியில் அரங்கேறியுள்ளது. ஒரு பள்ளி மாணவன் இரவு நேரங்களிலும் கை அசைப்பது போன்று சைகைகளை செய்கிறான் என்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் அவரது பெற்றோர்கள் அனுமதித்தனர். அந்த சிறுவனை அந்த படுக்கையிலேயே படுக்க வைத்த போது துப்பாக்கியால் சுடுவது போன்ற செய்கையையும், போனில் இரு விரல்களையும் கண்ட்ரோல் செய்வது போன்றும் ஏதோ பட்டனை தட்டுவது போன்ற வெறும் கைகளாலேயே விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் பெற்றோர் ஆரம்ப காலங்களிலேயே இதை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.


He came to casualty early morning after got addicted to PUBG, Freefire… parents have to be blamed first place!
— vijaychakkaravarthy (@drkrvcvijay) April 7, 2022
High time parents come out of their own social media addiction,spend time with kids, teach them so many activities othr than medias!!don’t keep children idle wt mobile pic.twitter.com/mKfoJfdYsH