கொத்தடிமை அதிமுக என்று பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின் 20 நிமிட காரசார விவாதம்

நடைபெற இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சியில் தொடரட்டும். நம்ம ஆட்சி, என்ற முழக்கத்தோடு நாம் இந்த தேர்தலை சந்திக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விடியலுக்கு தங்கள் எதிர்காலத்திற்கும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தால் தான் சரியா இருக்கும் என்று முடிவுசெய்து ஒரு தொலைநோக்கு பார்வையோடு நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை விழுத்தி நம்மை தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர வச்சாங்க. ஒரு ஆட்சி என்பது ஐந்து ஆண்டு காலம் அந்த 5 ஆண்டு காலத்திற்குள் பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தரணும். இதுதான் நல்லாட்சியினுடைய இலக்கணம். ஆனால் ஆட்சிக்கு வந்து இன்னும் ஓராண்டு காலம் கூட முடியறதுக்கு முன்னாடி கொடுத்த வாக்குறுதிகளை முக்கால் பங்குக்கு மேலே நிறைவேற்றிக் கொடுத்து ஆட்சிதான் நம்முடைய ஆட்சி என்று நெஞ்சு நிமிர்த்தி நாம் சொல்ல முடியும். அத்தகைய தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி நடந்து கொண்டு வருகிறது பெரும்பான்மை வளர்த்தால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையாக வெற்றி பெற்றால் தான் நாம் நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கொண்டு போய் சேர்க்க முடியும். அந்த எண்ணத்தோடு தான் உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்து இருக்கிறோம். காரோண கால கட்டுப்பாடுகள் இருக்கிற காரணத்தினாலே உங்களையெல்லாம் நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் இப்ப இருக்கு அது உங்களுக்கு நல்லா தெரியும், அதனாலதான் காணொளி மூலமாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு. காணொளி மூலமாக நடைபெறக்கூடிய தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கூட்டம் நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள் சொல்வதுபோல கோவையில் முதல் கூட்டமாக நடக்குது. வழக்கம்போலவே மிக பிரம்மாண்டமாகவும் எழுச்சியோடும் இந்த கூட்டத்தை மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் இதை சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கிறார். சுமார் 300க்கும் மேற்பட்ட இருக்கக்கூடிய இடங்களில் இருந்து அங்கு இருக்கக்கூடிய கழகத் தோழர்களும் பொதுமக்களும் இந்த கூட்டத்தில் பங்கெடுத்து இருக்கிறார்கள், நாம் நேருக்கு நேராக சந்திக்கவில்லையென்றாலும் ஒருத்தர ஒருத்தர பக்கத்திலிருந்து பார்க்க முடியவில்லையென்றால் நாம ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வால் அந்த பாசத்தால் அன்பால் நீங்க வேற நான் வேற இல்லை என்கிற உணர்வோடு தான் இந்த மேடையில் நான் நின்னுகிட்டு உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன் தமிழ்நாடு உழவர் வாழ்வுக்காகவும் உரிமைக்காகவும் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை உழைத்த அவர்தான் உத்தமத் தியாகி நாராயணசாமி நாயுடு அவர்கள் அவருடைய பிறந்தநாளான இன்னைக்கு இந்த கூட்டம் நடக்கிறது மிக பொருத்தமாக அமைந்து இருக்கு. கோவை மாவட்டம் அவினாசி வட்டம் வையம் பாளையம் என்ற சின்ன ஊரில் பிறந்து தமிழ்நாட்டின் அனைத்து உழவர்களோட தலைவராக உயர்ந்து கம்பீரமாக இருந்தவர்தான் மதிப்பிற்குரிய நாராயணசாமி நாயுடு அவர்கள் பச்சை துண்டுக்கு இந்த நாட்டுல ஒரு மரியாதையும் கம்பீரத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் தான் அவர் தமிழ்நாட்டில் மட்டும் இல்ல அகில இந்திய முழுமைக்கும் உழவர்கள் இயக்கத்தை உருவாக்கி உருவாக்குவதற்கு எல்லா முயற்சிகளும் எடுத்தவர் அவர், நாராயணசாமி நாயுடு அவர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு மதிப்பளித்து 1989ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஆனதற்கு பிறகு உழவர்கள் செலுத்தவேண்டிய கட்டண சலுகையை அறிவிக்காமல் அதை செலவு என அறிவிக்காமல் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்கிற நிலையை உருவாக்கினார். அதாவது உழவர்களுக்கு இலவச மின்சாரம் என அறிவித்தார் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் மரியாதைக்குரிய நாராயணசாமி நாயுடு அவளுடைய முக்கியமான கோரிக்கைகளில் 4 முதல் கோரிக்கை உழவர் பெருமக்களுக்கு கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் இதனை வழங்கிய ஆட்சி தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இரண்டாவது கோரிக்கை கட்ட இயலாத நிலையில் இருக்கக்கூடிய உழவர்கள் வங்கி கடனை தள்ளுபடி செய்வது , 1989 ஆட்சியாக இருந்தாலும் சரி 1996 ஆட்சியாக இருந்தாலும் சரி 2006 ஆம் ஆண்டு ஆட்சி காலமாக இருந்தாலும் சரி இப்போதுதான் உழவர்கள் கடனை ரத்து செய்து ஆட்சி தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. வேளாண் பொருட்களுக்கு அடிப்படை விலையை அரசு நிர்ணயம் செய்யவேண்டும் என்பது அவரது மூன்றாவது முழக்கமாக இருந்துச்சு அதற்காகத்தான் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்தோம். அந்த கோரிக்கையை இறுதிவரை வலியுறுத்தி வருகிறோம் வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்பது அவருடைய நான்காவது முழக்கம் , தொழில் மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கை முறை பண்பாடாக மாற்றுவதற்கு வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். கழக ஆட்சியில் தான் நெல்லுக்கு ஊக்கு விலை தரப்பட்டது கழக ஆட்சியில் தான் கரும்புக்கு உரிய விலை தரப்பட்டது. உணவு தானியக் கழகம் உருவாக்கப்பட்டது, ஏராளமான உணவு தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டது, ரேஷன் வினியோகம் முறைப்படுத்தப்பட்டது. வேளாண்மை உணவு ஆகிய இரண்டு துறைகளில் இரண்டு கண்களைப் போல இணைத்து செயல்பட்ட அரசு தான் நம்முடைய கழக அரசு, நிலமற்ற ஏழை வேளாண் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கவேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அந்த அடிப்படையில் நிலமும் வழங்கப்பட்டது. ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 750 ஏக்கர் நிலத்தை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 150 பேருக்கு வழங்கிய ஆட்சி தான் நம்முடைய கழக ஆட்சி. வேளாண் துறையை பொருத்தவரைக்கும் உத்தமத் தியாகி நாராயணசாமி அவர்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாக தான் கழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே இந்த கூட்டத்தின் மூலமாக அவருக்கு நான் என்னுடைய வணக்கத்தை உங்கள் அனைவரின் சார்பில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த ஊர் கோவை தான், அந்த வகையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றோடு இணைந்த ஊர் இந்த கோவை, அந்த கோவையில் தான் இந்தியாவுடைய முதல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது . அதே ஆண்டு அவிநாசி சாலை பாலம், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் பாலம் , உடுமலைப்பேட்டை குமாரலிங்கம் சாலை பாலம், அமராவதி ஆற்றுப் பாலம், கிராஸ்கட் சாலை மேம்பாலம், பில்லூர் அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மாநகர கூட்டு குடிநீர் திட்டம், பில்லூர் அணை இரண்டாம் கட்ட கூட்டு குடிநீர் திட்டம், இப்படி நாள் முழுக்க இந்த கோவை மாவட்டத்திற்கு கழகம் செய்திருக்கக் கூடிய திட்டங்களை செஞ்ச சாதனைகளை சொல்லிக்கொண்டே போக முடியும். கோவை பகுதியில் பெருமளவில் வாழக்கூடிய கொங்கு வேளாளர் கவுண்டர் அந்த சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது திமுக என்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அருந்ததியினர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் அது உங்களுக்கு நல்லா தெரியும் இப்படிப்பட்ட சாதனை சரித்திரத்தை சொந்தக்காரர்கள் நாம் என்பதை தலைநிமிர்ந்து இந்த கூட்டத்தின் வாயிலாக கோவை மாவட்ட மக்களுக்கு சொல்லிக் கொள்ள நான் விரும்புகிறேன். கடந்த பத்தாண்டு காலத்தில் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியால் இப்படி கோவை மாவட்டத்திற்கு செஞ்சு இருக்கக்கூடிய சாதனைகளை சொல்ல முடியுமா? இப்போ ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததற்குப் பிறகு நாம் செய்யக்கூடிய சாதனைகளை பட்டியல் போடுகிறேன். கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி பேரூராட்சியைச் சேர்ந்த 24 ஆயிரம் பேருக்கு பட்டா, முதியோர் பென்சன் வழங்கப்பட்டிருக்கு, லட்சத்து 22 ஆயிரத்து 715 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் கொடுத்திருக்கிறோம், 27 ஆயிரத்து 695 உழவர்களுக்கு, பயிர் கடன், நகை கடன் தள்ளுபடி செய்து இருக்கிறோம். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 620 பேர் உயிரை காப்பாற்றி இருக்கிறோம். 108 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, பஞ்சுக்கான நுழைவு வரி ஒரு விழுக்காடு ரத்து செய்யப்பட்டு இருக்கு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 12816 உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு இருக்கு. 2006 உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்க. 10 லட்சத்து 50 ஆயிரத்து 776 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு இருக்கு. மகளிர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருக்கிறோம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருக்கிறோம், கோவையில் நடந்த முதலீட்டாளர் மாநாடு அந்த மாநாட்டில் 34 ஆயிரத்து 723 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கு . காந்திபுரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும், கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கு. பொதுப்பணித் துறையில் கோவையை தலைமையமாக கொண்ட மண்டலம் உருவாகி இருக்கு. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்த கோவை நகர்புற வளர்ச்சி குழுமம் ஒன்று ஏற்படுத்தப்பட இருக்கு. எனவே இந்த பட்டியல் போதுமா இல்லை இன்னும் சொல்லட்டுமா ஆனா நேரத்தோடு அருமை கருதி சில முத்தாய்ப்பான சாதனைகளை சிலதை மட்டும் நான் சொல்லி இருக்கேன். எட்டு மாத காலத்தில் இவ்வளவு திட்டங்களையும் நாங்க முன்னெடுத்து செய்திருக்கிறோம். எந்த அரசாவது இந்த அளவுக்கு வேகமாக செயல்பட்டு இருக்கா கொரோன, மழை வெள்ளம் பல இடர்களை எல்லாம் தாண்டி பல வேகமாக நாம் செயல்பட்டு வருகிறோம், எங்களை பொறுத்த வரைக்கும் நான் முதலிலிருந்தே சொல்லிட்டு வர அது என்னன்னு கேட்டீங்கன்னா, இந்த ஸ்டாலினுடைய அரசு இது உங்களோட அரசு உங்க எல்லாருக்குமான அரசு இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல இனத்தினுடைய ஆட்சி ஒரு நல்லாட்சி தலைசிறந்த ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் இந்த அரசு, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் செஞ்சு தருவோம், அதையே ஒரு சாதாரண தனிமனிதனின் கோரிக்கையும் நிறைவேற்றி தருவோம். போன ஆட்சியில் உங்க பணத்தை கொள்ளை அடுத்தவர்களை பார்த்திருப்பீங்க இந்த ஆட்சியை பொறுத்தவரைக்கும் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்குற ஆட்சி கோவை மாநகர் முழுக்க அனைத்து சாலைகளும் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படாமல் அதனுடைய விளைவு தான் இப்போ நகரினுடைய முக்கிய சாலைகள் குடியிருப்பு சாலைகள் என எல்லாமே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது, உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் சாலை அமைக்கப்படும் முறையாக அமைக்கப்படும் என்ற உறுதியை இந்த கூட்டத்தில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வரக்கூடிய மேம்பாலங்கள் அது எந்த நிலையில் இருக்கும் உங்களுக்கு தெரியும் எனவே தேதி குறிப்பிட்டு உடனடியாக முடிக்கப்படும் என்ற உறுதியும் தருகிறேன். குடிநீர் இணைப்பு கேட்டு காத்திருப்போருக்கு வெளிப்படைத் தன்மையோடு இணைப்பு வழங்கப்படும். வீடு கட்ட அனுமதி பெற எளிமையான வழி முறைகள் கையாளப்படும். சிறு குறு தொழில் முனைவோருக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும், வார்டு வாரியாக குறைதீர்ப்பு அதற்கென ஒரு முகாம் மாதாமாதம் அமைக்கப்படும் தமிழ்நாடு அனைத்து பகுதிகளிலும் வளரும் அனைத்து துறைகளும் வளரும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிற ஆட்சி தான் நம்ம ஆட்சி

நீட் எதிர்ப்பும் பாஜக திட்டமும் – ஸ்டாலின் பதிலடி

ஒன்றிய அரசிடமும் நம்முடைய தமிழ் நாட்டிற்கான உரிமைகளை போராடியும் , வதந்தியும் பெறுகிற இயக்கமாக, ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி இருக்கும் தமிழ் நாட்டின் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ கல்விக்கனவை சிதைப்பதற்கு நீட்தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதா தொடங்கி 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் நாம இழந்திருக்கிறோம். நீட் தேர்வு என்பது பல லட்சம் கொடுத்து பயிற்சி மையங்களில் படிக்க வசதி உள்ள மக்களுக்காக அதற்காக ஏற்பட்ட வசதியானது தான் முதல் ஆண்டு இடம் கிடைக்கலையா அடுத்தாண்டு லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெறுகிறார்கள் இது எல்லா மாணவ மாணவியர்களும் பெற முடியாது ஏழைகள் முடியுமா முடியாது அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் முடியுமா அதுவும் முடியாது நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் தெரிஞ்சதும் மறுநாள் அதாவது நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினோம். அதைத் தொடர்ந்து வருகிற 8 ம் தேதி அதாவது நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு சட்டமன்றம் கூடவிருக்கு மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப் போகிறோம். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2 சட்ட மசோதாக்கள், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது, அதனை ஒன்றியம் பாஜக அரசு மதிக்கவில்லை. பல மாதங்கள் கிடப்பில் போட்டு இருந்துச்சு காரணம் எதுவும் சொல்லாமல் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது . இந்த தகவல் தமிழக அரசுக்கு சொல்லப்படும் , அன்னிக்கி இருந்த சட்ட மன்ற அமைச்சராக இருந்த சண்முகம் அதனை மூடி மறைத்துவிட்டார். அதை தெரிந்து கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கேள்வி எழுப்பினேன். ஒன்றிய அரசிடமிருந்து ஏதாவது தகவல் வந்தா நீங்க கேட்டீங்களா எத்தனை நாட்கள் தான் காத்து இருப்பது அந்த கேள்வி கேட்டேன் என்ன பதில் சொன்னாங்க எந்த தகவலும் வரவில்லை என்று சட்ட அமைச்சராக இருந்த சி வி சண்முகம் சட்டமன்றத்தில் சொன்னார் எல்லாத்துக்கும் முந்திக்கொண்டு பதில் சொல்பவர்கள் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னார் தெரியுமா கவனருக்கு நாம் அனுப்பத்தான் முடியும் அவரை போய் நாம் கேள்வி கேட்க முடியாது என்று கையை விரித்தார், இதில் உண்மை என்னன்னா ஒன்றிய அரசு அதனை திருப்பி அனுப்பி விட்டது அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்தார்கள் . இது சம்பந்தமாக ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்துச்சு ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நாங்கள் எப்போதும் திருப்பி அனுப்பிவிட்டோம், அப்படின்னு அங்க பதிவு பண்ணினார் அதன்பிறகுதான் உண்மை நமக்கு தெரிஞ்சது, நடு வீட்டில் திருட மாட்டிக்கொண்டது போல அதிமுக மாட்டிகிச்சு அவங்கள கொத்தடிமைத்தனம் காரணமாக எல்லாத்துக்கும் தலையாட்டிக் கொண்டே இருந்ததன் காரணமாக அடிமை சேவகம் காரணமாக அன்று நீர் மசோதாவை மீண்டும் நிறைவேற்றினார்கள் , நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்கு பிறகு மீட்டு சில பத்தாண்டுகளாக தான் பலரும் படிக்க தொடங்கி இருக்கிறார்கள். படித்து வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள் ஆனா படிக்கிறதுக்கு உனக்கு தகுதி வேணுங்க தடுக்கிற பழைய சூழ்ச்சியோட புது வடிவம் தான் இந்த நீட் அதனாலதான் நான் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம். மருத்துவ படிப்புகளில் சேருவதால் யாரும் மாறுவார்கள் ஆகிவிடமாட்டார்கள் , மருத்துவ படிப்புகளில் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவர்கள் ஆவார்கள் , அப்படிதான் உலகின் தலைசிறந்த நம்முடைய தமிழ்நாடு டாக்டர்கள் இருக்கிறார்கள். நீட் தேர்வை மேலோட்டமா பார்க்கக்கூடாது அதோட முகமூடியை கழட்டி பார்க்கணும் வெறுமனே அரசியலுக்காக எதிர்க்கவில்லை மக்கள் விரோத ஒன்றியச் பாஜக அரசு எதிர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக் கிடக்குது. மக்களுக்கு எதிரான அவ்வளவு சேவைகள் அவங்க செஞ்சுகிட்டு இருக்காங்க எனவே நீட்தேர்வு வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை நீட் தேர்வு என்பதை 2016ஆம் ஆண்டு பாஜக அரசாங்கத்தால் திணிக்கப்பட்டது தான் அந்த தேர்வுக்கு 2016ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அதனால் 2016-17 ஆம் ஆண்டிற்கான தேர்வில் தமிழ்நாட்டுக்கு விளக்கு கிடைத்தது நான் மறுக்கவில்லை , இதே எதிர்ப்பைத்தான் தொடர்ந்து காட்டியிருந்தால் தேர்வை நடத்தாமல் விட்டுருப்பார்கள் ஆனால் அடிமை அதிமுக அரசாங்கம் 2017-18 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நீட்தேர்வு தலையாட்டி ஏற்றுக்கொண்ட இடையே பிரச்சனை தான் இவ்வளவு பிரச்சனை வந்திருக்கு, இதோ இப்ப நாம துணிச்சலுடனும் ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். நீட் எதிர்ப்பு பின்வாங்க மாட்டோம் நீட் மட்டும் கிடையாது தமிழ்நாட்டில விரோதமான தமிழ்நாட்டுக்கு எந்த விதமான திட்டம் வந்தாலும் எல்லாத்தையும் நாங்க எதிர்ப்போம் அதை அனுமதிக்க மாட்டோம், மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கும் திமுக அரசாங்கம் மாநில ஆட்சியை நடத்திவரும் இந்த மகத்தான நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நான் முழுமையான வெற்றியை பெற்றால் கோட்டையிலிருந்து உருவாககும் அனைத்து திட்டங்களும் அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் செல்லும் அனைத்து வீடுகளுக்கும் வீடுகளுக்கும் போய் சேரும் விடியலில் வரும் சூரிய வெளிச்சம் போல தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம்ம ஆட்சி உள்ள ஆட்சியிலும் தொடர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்

Spread the love

Related Posts

CSK அணிக்கு இனிமேல் டோனி கேப்டன் இல்லை | வெளியான அதிர்ச்சி தகவல் | ரசிகர்கள் சோகம் | புதிய கேப்டன் யார் ?

ஐபிஎல் போட்டி கோலாகலமாக மும்பையில் வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதில் முதல்

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜா அவர்களின் கார் மீது காலணி வீசிய பாஜகவினர்

மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜா அவர்களின் கார் மீது காலணி

கணவனுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாக இருந்த போட்டோக்களை பதிவிட்ட நடிகை ஸ்ரேயா | மேலும் புகைப்படங்கள் உள்ளே

தமிழ் நடிகை ஸ்ரேயா சரண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும்