சேலம் மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் நேற்று அதிமுக தொண்டர்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை ஏற்று கலந்து கொண்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக அந்தக் கூட்டத்தில் பல தொண்டர்கள், கட்சி மென்மேலும் வளர வேறு என்னென்ன திட்டங்களை கொண்டு வரலாம என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது சில தொண்டர்கள் நம் கட்சி பிளவுபட்டு இருப்பதால் தான் வாக்காளர்களை நாம் இழக்கிறோம்.
அதனால் கட்சியில் இருந்து சென்ற சசிகலாவையும் ஆமமுக கட்சியின் தலைவர் தினகரன் அவர்களையும் நம் கட்சியுடன் இணைத்தால் நாம் ஆரோக்கியமான ஒரு நிலையை அடைவோம். அதனால் இதைக் கருத்தில் கொண்டு ஆமமுக வை அதிமுக வுடன் இணைத்து வையுங்கள் என்று தொண்டர்களோ பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளனர்.
இதன்படி வருகிற 5 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊழியர் கூட்டத்தை கூட்டி ஆமமுக முகவும் அதிமுகவும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.