சூர்யா குமார் முதல் பந்திலேயே அவுட் ஆகா அவரை பார்த்து என சொன்னார் ரோஹித் ?

இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் கோல்டன் டக் முறையில் வெளியேறினார். இதனைப் பற்றி ரோகித் சர்மா பேசியிருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த முடிந்தது. அதில் 270 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணியின் மிடிலாடர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் ஏகரின் முதல் பந்திலையே போல்ட் ஆகி வெளியேறினார்.

இதைப் பற்றி ரோகித் சர்மா கூறும் போது அவர் வெறும் மூன்று ஆட்டங்களில் மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். அதனால் அதனைப் பற்றி பெரிதாக பேச எதுவும் கிடையாது அவர் மூன்று நல்ல பந்துகளை சந்தித்தார். அதில் அவுட் ஆனார். ஆனால் உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நேற்று சென்னையில் அவர் எதிர்கொண்ட அந்த பந்து அவ்வளவு ஒன்றும் நல்ல பந்து எல்லாம் கிடையாது. அவர் காலை முன்னால் வைத்து ஆடி இருந்தால் அந்த பந்தை அழகாக ஆடி இருக்கலாம். ஆனால் எனக்கு தெரியும் அவர் ஒரு நல்ல பிளேயர் அவர் சூழல் பந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். அதை நாம் சென்ற வருடங்களில் பார்த்திருப்போம். ஆந்த ஒரு காரணத்திற்காக தான் நாங்கள் அவரை அணியில் வைத்திருக்கிறோம். கடைசி 15-20 ஓவர்களில் அவரைப் போன்று ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் வெறும் மூன்று பந்துகளில் மூன்று அவுட் ஆவது எதிர்பாராமல் நடந்த ஒரு காரியம். அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். ஆனால் அதை எதிர்கொள்ள தைரியமும் மனவலிமையும் தேவை. அவர் அந்த விஷயத்தை தான் தற்போது எதிர்கொள்ள வேண்டும் என சூரியாவிற்கு சப்போர்ட்டாக ரோகித் சர்மா பேசி இருக்கிறார்.

Spread the love

Related Posts

படுத்த படுக்கையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

படப்பிடிப்பின்போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது

முதல் ரோபோ போலீஸ் | காவலர் வேளைக்கு வேட்டு ? | முழு வீடியோ உள்ளே

அமெரிக்காவில் காவல்துறை காவலர்கள் மற்றும் நாய்களை தாண்டி தற்பொழுது ஒரு ரோபோ நாயும் இணைந்துள்ளது பலரால்

சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிப்பு என்னென்ன ??

தற்போது கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதால் சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதித்து சுகாதாரத்துறை

Latest News

Big Stories