சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இரவு வந்து ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திரும்பும் போது ரயில் பெட்டியின் இரண்டு சக்கரங்கள் திடீரென கழன்றதால் நேற்று இரவு 12 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் இரண்டு சக்கரங்களும் சரி செய்யப்பட்டன.

இசம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளும் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்த ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
