நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்த போட்டியை நேரில் கண்ட தமிழக இந்திய ரசிகர்கள் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியையும் ஆஸ்திரேலியாவயும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்கள் கோம்பையை வெல்லலாம் என்ற நோக்கத்தில் களம் இறக்கிய இரண்டு அணிகளும் பலப்பரிட்சை நடத்தியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 270 ரன்கள் என்ற இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது.
பிறகு இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அபாரமாக தொடங்கி இருந்தாலும் போக போக விக்கெட்டுகள் மளமளவென என சரிந்தது. இதில் சுழல் பந்து வீச்சாளர்கள் ஜாம்பா மற்றும் ஏகர் இவர்கள் இருவரும் சேர்ந்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் சூழலுக்கு தடுமாறி இந்திய அணி சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

இந்த போட்டியை நேரலையில் கண்டு விட்டு மைதானத்தில் இருந்து வெளியே வந்த இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டபோது இந்தியா மிடில் ஆர்டர் சரி இல்லை என்றும் மேலும் ஒழுங்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் விமர்சித்தனர். மேலும் பேசிய அவர்கள் ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை கண்டு மிகவும் வியந்த பாராட்டியுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியை சிறப்பாக கையாண்டார் எனவும் அவர் பில்டிங்கிலேயே 40 ரன்கள் தடுத்திருப்பார். ஸ்டீவ் ஸ்மித் என்னதான் அவர் பேட்டில் ரன் அடிக்கவில்லை என்றாலும் அவர் எப்போதுமே ஆஸ்திரேலியாவிற்கு ஒரு சிறந்த கேப்டனாக இருந்து வருகிறார்.
அவருடைய கேப்டன்சி நுணுக்கங்களை நேரில் கண்டு ஆச்சரியமடைந்தோம். ஆஸ்திரேலியா வீரர்கள் மைதானம் முழுக்க தவழ்ந்து கொண்டே பல போர்களையும், சிங்கல்களையும் தடுத்தனர். இதனாலேயே இந்தியாவால் ரன் எடுக்க முடியவில்லை ஆஸ்திரேலியா பல்ட்டிங்கில் அபாரமாக செயல்பட்டது. ஆஸ்திரேலியா எல்லா விதத்திலும் சிறப்பாக இந்த போட்டியை விளையாடியது. ஏதாவது ஒரு இடத்தில் சிறிய ஓட்டை இருந்து விட்டால் போதும் அந்த ஓட்டையை பெரிதாக்கி உள்ளே நுழைந்து விடுகிறார்கள் இந்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் என்று ஆஸ்திரேலியா அணியையும் ஸ்டீவ் ஸ்மித்ஐயும் பாராட்டி பேசி உள்ளனர் சென்னை ரசிகர்கள்.
மேலும் இந்தியா பந்து வீச்சாளர் அஸ்வினும் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டும் விதமாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேப்டன்சி இந்த இரண்டும் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவுகள் என கூறியுள்ளார்.

Steve smith and captaincy is a match made in heaven👌#INDvAUS
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 22, 2023