தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார் நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள். அவர் துபாய் விமான நிலையத்திற்கு சென்ற உடன் அங்கு தமிழர்கள் பலரும் அவருக்கு நல்ல வரவேற்பு அளித்தனர்.
துபாயில் சர்வதேச கண்காட்சி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், இது ஆறு மாதங்கள் நடத்தப்படும். அதில் தமிழக வாரம் என்று மார்ச் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். இந்த அரங்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தொழில்துறை, மருத்துவம், தகவல் மின்னணுவியல், தமிழக வளர்ச்சி, ஜவுளி, தொழில் பூங்காக்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற முக்கியத் துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அந்த காட்சி படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படும்.

துபாய் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்தியத் துணை தூதர் டாக்டர் அமன் பூரி வரவேற்றார். ஏராளமான வெளிநாடு வாழ் தமிழ் மக்களும் முன் நமது முதல்வர் ஸ்டாலின் அன்புடன் வரவேற்றனர்.
இதோடு மட்டும் போய்விடாமல் தமிழக முதல்வர் அவர்கள் துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின் போது தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வணிகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் அமைச்சர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். மேலும் தொழில் நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் வர்த்தகம் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் பேசி வருகிறார் .அதோடு சேர்த்து புலம்பெயர் தமிழர்களையும் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.
