டோல்கேட்டில் காரில் வந்த குடும்பத்தினரை அடித்து சட்டையை கிழித்த அராஜக ஊழியர்கள்.. ! இதெல்லாம் அநியாயம் …

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் எடுத்தும் நீண்ட நேரமாக ஒரு காரை நிறுத்தி வைத்திருந்ததை உரிமையாளர் தட்டி கேட்ட நிலையில் அவரை ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விதிகளுக்கு புறம்பாக மதுரை தெப்பலூர் சுங்கச்சாவடி செயல்படுவதாக அப்பகுதி மக்கள் அந்த சுங்கசச்சாவடியை நீக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அந்த சுங்கச்சாவடியில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் பிரபு. தற்போது கோடை விடுமுறையையொட்டி திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர் சுற்றுலாவை முடித்துக் கொண்டு காரில் மீண்டும் சென்னை புறப்பட்டனர்.

அப்போது கோவில்பட்டி- விருதுநகர் 4 வழிச்சாலை வழியாக வந்தனர். திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் 4 ஆவது பாதையில் இயந்திர கோளாறு காரணமாக சென்னையை சேர்ந்த பிரபுவின் வாகனத்தை 3 ஆவது பாதைக்கு வருமாறு ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது அந்த பாதையில் ஏற்கெனவே நின்றிருந்த வாகனம் பாஸ்ட்டேகில் பணம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த வாகனம் புறப்பட்டு சென்றது. அங்கு பிரபுவின் வாகனம் வந்தது. அப்போது பாஸ்ட்டேக்கில் கட்டணம் எடுக்கப்பட்ட பின்னரும் அவரது கார் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

சுங்கச்சாவடி ஊழியர்களை பிரபு திட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து வாகனத்தை எடுக்க முயற்சித்த போது பெண் ஊழியர் பிரபுவிடம் வந்து தகாத வார்த்தைகளால் பேசி வாகனத்தை நிறுத்துமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் பிரபு காரில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சுங்கசாவடி ஊழியர்கள் பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காரில் இருந்த குடும்பத்தினர் வந்து தடுத்த போது அவர்களையும் 4 சுங்க சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதுகுறித்து சம்பவத்தை அறந்த போலீஸார் பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை காரின் பின்புறம் இருந்த மற்றொரு வாகனத்தின் உரிமையாளர் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Related Posts

Viral Video | பெண்ணின் காதில் குடிபுகுந்து ஆட்டம் போடும் பாம்பு | அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் | வீடியோ வைரல்

பெண்ணின் காது ஒன்றில் சிறிய பாம்பு ஒன்று உள் நுழைந்து சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது

இளம் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷின் போட்டோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல்

இளம் நடிகை சாரா உடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளத்தில்

பேசிக்கொண்டிருந்த பொது தீடீரென சரிந்த மேடை… உடனே ஜம்ப் அடித்து குதித்த அன்புமணி … வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்து

Latest News

Big Stories