பள்ளிக் கல்வி கட்டணத்தை சரியாக செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்தால் அந்த மெட்ரிக் பள்ளிகளுக்கு இனிமேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ரிக் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக நடைபெறும் ஒரு அவலக்கேடு தான் கட்டணம் கட்டாத மாணவர்களை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தல். இப்படி மாணவர்களை வெளியே நிற்க வைக்கும் போது அவர்கள் அந்த நாளுக்கு உண்டான பாடங்களை கற்க முடியாமல் போகிறது மாணவர்களையும் இது மனதளவில் பெரிதும் பாதிக்கிறது என்பதால், இனிமேல் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி கட்டணம் கட்டாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்தது.