உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் பகுதியில் தலைநகரான கீழ் மற்றும் சேபோரிசியா இடங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் பதுங்கி தஞ்சம் அடைந்துள்ளனர்
- இரண்டு நாட்களாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்கே கல்வி பயிலும் மாணவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்குனு சேல்லவேண்டும் என அந்நாட்டு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பாக தாக்குதலுக்கு உள்ளாக கூடிய உக்ரைன் தலைநகர் பகுதியான கீவ் மற்றும் சேபோரிசியா போன்ற இடங்களில் அதிகமான மாணவர்கள் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர் , அங்கிருக்கும் பெரிய கல்லுரரிகளில் பதுங்குகுழிகளில் மற்றும் அதன் அருகாமையில் இருக்கக்கூடிய மெட்ரோ உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் மாணவர்கள் சென்று தஞ்சம் அடையவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பதுங்குகுழிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் , உக்ரைன் தலைநகர் முக்கிய இடங்களுக்கும் ரஷ்ய படைகள் வரும் என்ற தகவலும் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது .
தமிழக மாணவர்கள் தற்போதைய நிலை

- உக்ரைனில் பயிலக்கூடிய தமிழக மாணவர்கள் பாஸ்போர்ட் மற்றும் தங்களின் முக்கிய ஆவணங்கள் , உடமைகள் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடவேண்டும் எனவும் மீண்டும் மறு அறிவிப்பு வரும்போதுதான் மேலே வரவேண்டும் எனவும் எந்தக்காரணமும்மின்றி எ.டி.எம் மற்றும் ஹோட்டல் , இதர கடைகளுக்கும் சாலைகளுக்கு , எந்த காரணத்தை கொண்டு வெளியில் வரக்கூடாது அந்த பதுங்குகுழிகளை விட்டு வெளியில் வரக்கூடாது என பாதுகாப்பான சூழல் வரும்வரை
அங்கேதான் தங்கி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாணவர்கள் கூறினார்… அந்த பதுங்கு குழிகளில் செல்போன் , மொபைல் சார்ஜர் , நெட்ஒர்க் டவர் உள்ளிட்ட வசதிகள் இல்லாத காரணத்தினால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாத சூழல் நிலவி இருக்கிறது.