தமிழ் -ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு ! திமுக எம்பி கனிமொழிக்கு, அண்ணாமலை நோட்டீஸ் ! என்ன நடந்தது?

சொத்து விபரங்கள் தொடர்பான விஷயத்தில் திமுக எம்பி கனிமொழி அண்ணாமலையிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், மன்னிப்பு கோர வலியுறுத்தியும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் கனிமொழி எம்பிக்கு, அண்ணாமலை தனது பதிலுடன் வக்கீல் மூலம் பரபரப்பான நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஆளும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுக தலைவர்களும், அமைச்சர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் அண்ணாமலை திமுக அமைச்சர்கள், தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வீடியோ மூலம் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இது விவாதத்தை கிளப்பிய நிலையில் திமுக தலைவர்கள் விளக்கம் அளித்தனர்அதாவது அண்ணாமலை தவறான தகவல்களை வெளியிடுகிறார் எனக்கூறி மறுத்தனர்.

மேலும் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர்கள் கூறினார்.இதன் தொடர்ச்சியாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், நஷ்டஈடு கோரியும் திமுக தலைவர்கள் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதற்கு அண்ணாமலை ஒப்புக்கொள்ளவில்லை. மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என அண்ணாமலை கூறி வருகிறார்.

இதற்கிடையே தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக எம்பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பினார். அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு பரப்பும் வகையில் சொத்து விபரங்கள் குறித்து வீடியோ வெளியிடப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும். மேலும் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் தன்னை பற்றி வெளியிடப்பட்ட வீடியோவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீசில் கனிமொழி தெரிவித்து இருந்தார். இந்த வக்கீல் நோட்டீசுக்கு அண்ணாமலை தற்போது பதிலளித்துள்ளார். அதாவது அண்ணாமலை சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் கனிமொழிக்கு நோட்டீஸ் வாயிலாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

அதில், கனிமொழியின் சொத்து விவரங்களை வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்கமாட்டேன். சட்ட நடவடிக்கை என்ற பெயரில் என் குரலை ஒடுக்க முடியாது. தேவையென்றால் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமப்பிப்பேன் என அண்ணாமலை தனது வக்கீல் நோட்டீஸ் மூலம் கனிமொழி எம்பியிடம் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related Posts

எம்.பி ஆகிறாரா கமல் ? போன் போட்ட ராகுல்காந்தி ! உடனே ஓகே சொன்ன கமல் ! அதிர்ச்சியில் திமுக ,பாஜக !

ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார் மக்கள் நீதி

“எப்புடி உனக்கு இவ்ளோ பெருசா இருக்கு ?” | அந்தரங்க கேள்வியை கேட்டு டிக் டாக் இலக்கியாவை திக்குமுக்காட செய்த ஷகீலா

டிக் டாக் இலக்கியாவின் உடல் குறித்து பச்சையாக கேட்டு அவரை தர்ம சங்கடத்திற்கு தள்ளியுள்ளார் ஷகீலா

“பொம்பள கேஸ்ல மாட்டினா, திராவிடன்னு சொல்லி தப்பிச்சிக்கலாம்” என்று மீம் போட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாடகி சின்மயி

“பொம்பள கேஸ்ல மாட்டினா, திராவிடன்னு சொல்லி தப்பிச்சிக்கலாம்” என்று மீம் போட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாடகி

Latest News

Big Stories