லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்கிரீன் செவன் ப்ரொடியூஸ் செய்யும் படம்தான் லியோ. இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இதில் இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த உள்ளனர்.
இந்த படத்தில் திரிஷா தான் விஜய்க்கு ஜோடி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக படத்தினுடைய ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மிஷ்கின் அவர்களும் தனது ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து திரும்பியதாக தகவல்கள் வெளிவந்தது. அதை அதிகாரபூர்வமாக மிஷ்கினும் கன்பார்ம் செய்தார். தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் உடைய போஷனும் முடிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செஞ்சமர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது தமிழில் படத்திற்கு பெயரை வையுங்கள் லியோ என்பது எப்படி தமிழ் பெயராகும் தமிழர்கள் தான் தமிழ் படத்தை பார்க்கின்றனர். தம்பி விஜய் அவர்கள் இதை கருத்தில் கொண்டு தமிழில் அவருடைய படத்தின் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
