“திமுகவும், பெரிய வெங்காயமும் ஒன்று உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது…” | கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

திமுக தலைவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அதனால் விமானம் கூட ஏற முடியாது என திமுக அமைச்சர்களை மிகவும் கடுமையாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

திமுக மற்றும் பாஜக இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. பல காரணங்களால் இந்த இரண்டு கட்சிகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் மோதிக் கொள்கிறது குறிப்பாக முதலமைச்சர் துபாய் பயணம், மின்வாரியத்தில் முறைகேடு, தமிழக சாலைகளில் கலைஞர் பெயர் சூட்டல், தமிழ்தாய் படம் இப்படி பல்வேறு பிரச்சனைகள் இவர்கள இருவருக்கும் வந்த வண்ணம் உள்ளது. இந்த மோதல் தற்போது சற்று பெரிதாகி பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களை ஆங்கிலம் பேச தெரியாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழணங்கு “ஸ” பிரச்சனை பெரிதாகி தங்கம் தென்னரசுக்கு நெத்தியடி பதிலளித்த அண்ணாமலை

சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார் அப்போது கலந்து கொண்டு பேசிய அவர் : “திமுகவை வீழ்த்துவது எளிதான ஒரு காரியம் 260 நபர்கள் மேல் மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் திமுக ஒன்றுமே கிடையாது. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது அதே போலத்தான் திமுகவும். 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும். மக்கள் பாஜகவை நோக்கி வெள்ளம் போல் திரண்டு வர ஆரம்பித்துவிட்டனர். 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. இதை யாராலும் பிரிக்க முடியாது என கூறியுள்ளார்.

தமிழக மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. திராவிட மாயை ஒளிவதற்கு திராவிட மாடல் கட்சி செயல்பட்டு வருகிறது. 90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலமே தெரியாது. அதனால் அவர்களால் விமானம் கூட ஏறத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசாகூட நிதியை அவர்களால் திரட்ட முடியாது. இப்படி என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதைக்கண்ட திமுகவின் மூத்த அமைச்சர்கள் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

Spread the love

Related Posts

உடைந்த பாஜக கூட்டணி? அதிருப்தியில் அண்ணாமலை, மெகா கூட்டணி எடப்பாடி எந்தக்கட்சிகளை குறிவைத்துளார் தெரியுமா ?

அமிட்ஷாவை சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது

அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி, அம்மா வளையல் வியாபாரி | கேகேஆர் அணிக்காக களமிறங்கும் இந்த ரமேஷ் குமார் யார் ?

ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு கிரவுண்டில் அவ்வப்போது டென்னிஸ் பால் டோர்னமெண்ட் வைப்பது நிறைய ஊர்களில்

x