திமுகாவை ஓட ஓட விரட்டுவோம் எடப்பாடி ஆவேச பேச்சு

அமைதியாக இருக்கும் கோவையை திமுகவினர் கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதே நோக்கம் தொடர்ந்தால் இதைப் பார்த்துக்கொண்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம் ஓட ஓட உங்களை மாவட்டத்தில் இருந்து விரட்டி விடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களையும் ஆதரித்து அந்த கட்சியின் எடப்பாடி பழனிசாமி ஒரு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் ஊடகங்கள் முன் பேசும்போது 200 ரூபாய்க்கு வழங்கப்பட்ட அம்மா சிமெண்ட் இப்போது வலிமை சிமெண்ட் என பெயர் வைத்து 450 ரூபாய்க்கு விற்கிறது இந்த அரசு. இதற்கு நீங்கள் எல்லாம் சூப்பர் முதல்வர் என அவரை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள், இந்தியாவிலேயே ஒரே முதல்வர் ஸ்டாலின்தான் எங்கீறீர்கள்.

மேலும் பேசிய அவர் திமுக அரசு எல்லோருடைய மக்கள் செல்வாக்கையும் தற்போது இழந்து நிற்கிறது, உங்களுக்கு திராணி இருந்தால் நேரடியாக அதிமுகவை எதிர்த்து திமுக வெற்றி பெற வேண்டும் குறுக்கு வழியை கையாள கூடாது என்று, அந்த கோவை பிரச்சாரத்தில் அவர் பேசினார். மேலும் இப்படியே நீங்கள் கோவையை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்தால் நாங்கள் உங்களை ஓட ஓட மாவட்டத்தில் இருந்து விரட்டி அடிப்போம் எங்கள் ஊருக்கு ஏதாவது பங்கம் என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சொன்னார்.

Spread the love

Related Posts

மைத்தனத்தில் அடித்து கொண்ட பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ரசிகர்கள் | வைரல் வீடியோ

பரபரப்பான ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான அணி தோற்கடித்ததும் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சேர்களை

“ஏன் போட்டோக்கள் மூலம் ரசிகர்களை குஷிபடுத்துவது எனக்கு தனி இன்பம், வார்த்தைகளால் அதை சொல்லமுடியாது” – ஓப்பனாக பேசிய சமந்தா

நடிகை சமந்தா தனது கணவனை விவாகரத்து செய்த பின்பு வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும் என

“முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்” பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். இன்றைக்கு