திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் தான் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார், ராவணனாக சயீப் அலிகான் மற்றும் சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
ஆதிபுருஷ் படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று திருப்பதியில் நடைபெற்றது. இதற்காக திருப்பதி வந்த நடிகர் பிரபாஸ் நேற்று அதிகாலையில், திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து இன்று காலை ஆதிபுருஷ் படத்தின் இயக்குனரும், நடிகை கீர்த்தி சனோனும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தனர்.

தற்போது இருவரும் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து வெளியே வந்த இருவரும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு காரில் ஏறி கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப டைரக்டர் ஓம் ராவத் காரின் அருகே வந்திருனிகார்.
அப்போது அவரை மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிக்க வந்த நடிகை கீர்த்தி சனோனுக்கு இயக்குனர் ஓம் ராவத் சட்டென முத்தம் கொடுத்தார். அவரின் இந்த செயலை எதிர்பார்க்காத கீர்த்தி கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.
ஆதிபுருஷ் டைரக்டரின் இந்த செயல் இணையத்தில் கடுமையாக டிரோல் செய்து வந்தனர். இதற்கு எதிராக கருத்து தெரிவித்த பாஜக மாநில செயலாளர் ரமேஷ் நாயுடு பாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதைக் கண்டு கோபமடைந்த மாநில பாஜக தலைவர், இது தேவையா என்று கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த டுவீட் தற்போது டெலீட் செய்யப்பட்டது.
"ஆதிபுருஷ்" பட இயக்குனர் மற்றும் ஹீரோயின் க்ரித்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் படம் வெற்றி பெற ஏழுமலையானை தரிசித்து பிரியாவிடைபெற்ற தருணம் pic.twitter.com/rkf6JEf8eM
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) June 7, 2023
