
சமூகவலைத்தளங்களில் திருமாவளவன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புகிறார்கள் இதனை கண்டறிந்து அவர்களை கைது செய்யவேண்டும் என்று திருமாவளவன் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது…

சமூகவலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சினுடைய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவது என்கின்ற நிலைப்பாட்டை சனாதன சக்திகள் செய்து வருகிறார்கள். இன்னும் குறிப்பாக அவரது முகநூல் பக்கம், அவரது ட்விட்டர் பக்கம், போன்றே போலியான கணக்குகளை ஆரம்பித்து அதில் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய அவதூறு பதிவுகளை வெளியிடுகிறார்கள். அவர் சொல்லாதவற்றை அவர் பேசாதவற்றை அத்தகைய பதிவுகளில் செய்வது ஒரு வாடிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் மிக குறிப்பாக தேர்தல்கள் நடைபெறுகின்ற போது இத்தகைய பதிவுகள் மிக அதிகமாக வருவதை பார்க்கிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போது கூட திடீரென இது போன்ற போலியான பதிவுகள் வெளியிடப்பட்டது தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தல் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இத்தகைய பதிவுகளை சமூக விரோதிகள் சனாதன சக்திகள் செய்து வருகின்றனர். இப்போது மீண்டும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கக் கூடிய சூழலில் அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மிகவும் வலுவோடு ஒற்றுமையாக, ஏனென்று சொன்னால் உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது சிறிய அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்ற போது. ஆங்காங்கே ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுவது என்பது மிக மிக இயல்பானது. ஆனால் இந்த முறை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லாத வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் எங்களுடைய தலைவர்
எழுச்சித்தமிழர் மற்றும் கூட்டணி கட்சிகளோடு மிக மிக இணக்கமாக இந்த கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இருந்தாலும் சரி தொகுதி பங்கீடுகள் இருந்தாலும் சரி எல்லா வகையிலும் சிறப்பான ஒரு முடிவை எட்டும் என்ற வகையில் இன்றைக்கு இந்த கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில், வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை மையப்படுத்தி அல்லது தேர்தலில் அரசியல் லாபம் பெற வேண்டும் என்பதற்காக. சாதிய மதவாத உணர்வுகளை தூண்டுகின்ற வேலையை சமூக வலைதளங்கள் மூலமாக செய்து வருகிறார்கள். அப்படி செய்கிறவர்கள் தொடர்ச்சியாக யார் என்பது சமூகவலைதளத்தில் பயணிப்பவர்களுக்கு தெரியும் காவல்துறையினருக்கும் தெரியும். இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் சனாதன சக்திகள் இத்தகைய பதிவுகளை செய்து வருகிறார்கள் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இன்றைக்கு காவல்துறை துணைத்தலைவர் சட்டம் ஒழுங்கு அவரிடத்திலே மனு கொடுத்திருக்கிறோம் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.