கேரளாவில் திரையரங்குகள் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திரையரங்கில் படங்கள் வெளியாகி 42 நாட்களுக்கு பின்னர்தான் OTT-யில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 2018 என்ற திரைப்படம் இன்றைய தினம் OTT-யில் வெளியாகிறது.

33 நாட்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் 2018 திரைப்படம் OTT-யில் வெளியாகியுள்ளதால் திரையரங்குகளை இன்றும் நாளையும் மூடி வேலை நிறுத்தம் செய்வதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு அதற்குரிய பணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
