இங்கிலாந்து கிரிக்கெடின் ஜாம்பவானாக இருந்த பெண் ஸ்டோக்ஸ் திடீரென்று ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமான அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
பென் ஸ்டாப்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அறிமுகமானார். அறிமுகமாகி முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் வென்றார் பின்பு இந்தியாவையும் தோற்கடித்தார். அப்படிப்பட்ட ஒரு நல்ல தொடக்கத்தை கண்ட பெண் ஸ்டோக்ஸ் தற்போது ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விலகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி குள்ளாகியுள்ளது. ஏனென்றால் பெண் ஸ்டோக்ஸ் எப்படிப்பட்ட ஒரு ஆட்டக்காரர் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிவர். தோத்து விடுவோம் என்று நினைக்கும் போட்டிகளை கூட இவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையால் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தர முயற்சிப்பார்.

இப்படிப்பட்ட ஒரு ஆட்டக்காரரான பெண் ஸ்டோர்ஸ் ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவது யாரும் அறியாததே. வருகிற செவ்வாய்க்கிழமை சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் ஒரு நாள் போட்டி இருக்கிறது அந்த போட்டியை முடித்துவிட்டு அதோடு ஓய்வு பெறுவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதற்கான காரணம் என்ன என்று அவர் கூறுகையில் :- “மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினம். மேலும் என்னுடைய இடத்தை நான் வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு விலகுவது தான் சரியானது. என்னுடைய எல்லா வித்தைகளையும் நான் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே பயன்படுத்தப் போகிறேன். மேலும் டி20 போட்டிகளிலும் என்னால் ஆன உதவியை அணிக்கு அளிப்பேன்.
மேலும் கடந்த சில மாதங்களாக ஓய்வே இல்லாமல் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒரு நாள் போட்டியில் இருந்து விலகி எனக்கடுத்து வருபவர்களுக்கு நான் வாய்ப்பளிக்க விரும்புகிறேன். எப்போதுமே இங்கிலாந்து ரசிகர்களை நான் நினைவில் வைத்திருப்பேன், உலகத்திலேயே நீங்கள் தான் உயர்ந்தவர்கள். எப்படியவாது செவ்வாய்க்கிழமை நடக்கும் ஆட்டத்தில் நான் கலந்து கொண்டு அந்த போட்டியை உங்களுக்காக வெல்வேன்” எனக் கூறி அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
