தேசிய விருதுகளைக் குவித்து வருகிறது சூரரைப் போற்று
68 ஆவது நேஷனல் அவார்ட் வென்றவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகர் விருதும் இசை இயக்குனர் ஜி வி பிரகாஷ் க்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் சூரரை போற்று படத்திற்காக கிடைத்துள்ளது. இதனை தற்போது சூரியா ரசிகர்கள் ஜிவி பிரகாஷ் ரசிகர்களும் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

சூரரை போற்று படம் வெளியாகி எல்லா தரப்பு ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாமினேஷனும் கிடைத்தது. தற்போது அதைத் தொடர்ந்து நேஷனல் அவார்டிலும் இந்த படம் நாமினேட் செய்யப்பட்டு தற்போது விருது கிடைத்துள்ளது. இவருடன் சேர்ந்து இந்தி நடிகரான அஜய் தேவ்கானும் தான்ஹாஜி படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.
மேலும் சூராரை போற்று படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய 3 விருதுகளோடு சேர்த்து மொத்தம் 5 விருதுகள் இதுவரை பெற்றுள்ளது.
