நடிகர் விஜய் மற்றும் கருணாநிதி தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசு மீதும் திமுகவினர் மீதும் அவதூறு பரப்புவதாக பாஜகவினர் மீது திமுகவினர் தொடர்ந்து குற்றசாட்டுகளை வைத்தி வந்தனர். இதனையடுத்து இந்த வழக்குகளை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புபவர்களை கைது செய்து வருகிறது.

இந்தநிலையில் கோவையில் கருணாநிதி குறித்தும் திமுக குறித்தும் டிவிட்டரில் உமா கார்க்கி என்பவர் அவதூறு பரப்பியதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதே நபர் நடிகர் விஜய் தொடர்பாகவும் தனது சமூக வலைதளத்தில் விமர்சித்து கருத்து தெரிவித்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து உமா கார்க்கியை கோவை போலீசார் இன்று காலை செய்தனர். உமா கார்கிக்கு சிறந்த செயல்பாட்டாளர் என கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான் பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை போலீசார் கைது செய்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
