பிரபல நடிகை “காதல்” பட சந்தியாவுக்கு சொந்தமான ரிசார்ட், சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகே உள்ளது.. இவரது கணவர்தான் இந்த ரிசார்ட்டை நிர்வகித்து வருபவராம்.. கூவத்தூர் பக்கத்தில், பரமன்கேணி என்ற பகுதியில் இந்த பண்ணை வீடு அமைந்துள்ளது… இந்த ரிசார்ட்டில் காதல் ஜோடியும், நண்பர்கள் சிலரும் வந்து தங்கியிருக்கிறார்கள்.

சம்பவத்தன்று இரவு 2 மணிக்கு, காதலர்கள் அறைக்குள், சுபாஷ் என்ற நபர் உள்ளே நுழைந்துள்ளார்.. காதலன், காதலி படுக்கையில் படுத்திருக்கும்போது, அவர்களுக்கு நடுவில் சுபாஷ் படுத்துள்ளார்.. பெண்ணிடம் பாலியல் சீண்டலும் செய்துள்ளார்.. இதனால் கண்விழித்துக்கொண்ட பெண், லைட் போட்டு பார்த்துள்ளார்.. அப்போதுதான், இந்த நபர் சிக்கி உள்ளார்.. அலறி கூச்சலிடவும், அதே ரூமில் படுத்திருந்த காதலன், பக்கத்து ரூமில் தங்கியிருந்த மற்ற நண்பர்கள், சுபாஷை சுற்றி வளைத்து கைது செய்து, தர்மஅடி தந்தனர்.. போலீசிலும் ஒப்படைத்தனர்.

இந்த நபர் எப்படி சிக்கினார் என்பது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.. நடிகையின் இந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் உள்ளது.. அத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளது. ஒருநாள் வாடகை என்பதுபோலதான் இந்த ரிசார்ட்டில் பணம் வசூலித்து வருகிறார்கள். ஒருவாரம்கூட தங்கி கொள்ளலாம்..

இந்த ரிசார்ட்டை பற்றி கேள்விப்பட்டு ராமச்சந்திரன் என்ற இளைஞர் தன்னுடைய காதலியுடன் சென்றுள்ளார்.. இந்த பெண்ணைதான் ராமச்சந்திரன் விரைவில் கல்யாணமும் செய்து கொள்ள போகிறார்.. தன்னுடைய வருங்கால மனைவி என்பதால், இந்த ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.. அவருடன் அவரது நண்பர்கள் 6 பேர் சென்றிருக்கிறார்கள்.. மொத்தம் 3 ரூம்களை புக் செய்துள்ளனர்..

ஒரு அறையில், ராமச்சந்திரனும், வருங்கால மனைவியும் தங்கியிருக்கிறார்கள்.. மற்றவர்கள் 2 அறைகளில் தங்கியிருந்திருக்கிறார்கள்.. முதல்நாள் ரிசார்ட்டிலும், பீச்சிலும் அனைவரும் ஜாலியாக பொழுதை கழித்துள்ளனர்.. இரவு நேரம் அவரவர் ரூமுக்கு திரும்பியுள்ளனர்.. சாப்பிட்டு அனைவரும் தூங்கிவிட்டனர்.. அப்போதுதான், நள்ளிரவு 2 மணிக்கு யாரோ தன்னை சீண்டுவது போல, வித்தியாசமாக உணர்ந்துள்ளார் அந்த பெண்.. உடனே பக்கத்தில் படுத்திருந்த ராமச்சந்திரனை எழுப்பியுள்ளார்.. “இந்த ரூமில் நம்மை தவிர, வேறு யாரோ 3வது நபர் இருப்பது போல தெரிகிறது” என்று பதட்டத்துடன் கூறியிருக்கிறார்.. இதனால், ராமச்சந்திரன் எழுந்து சென்று, விளக்குகளை போட்டுள்ளார்.. ஆனால், அந்த ரூமில் யாருமே இல்லை.. “புதிய இடம் என்பதால், அப்படி தோன்றியிருக்கலாம் என்று சொல்லி, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி தூங்க வைத்திருக்கிறார்..

கொஞ்ச நேரத்தில், ராமச்சந்திரனும் தூங்கிவிட்டார்.. மறுபடியும் காதலி அலறினார்.. ராமச்சந்திரன் யார்: “இந்த ரூமில் நிச்சயம் ஒருவர் தங்கியிருக்கிறார்” என்று அழுதுகொண்டே சொன்னார்.. இதனால் ராமச்சந்திரன் மறுபடியும் லைட்டை போட்டு, யாராவது இருக்கிறார்களா என்று ரூம் முழுக்க தேடினார்.. அந்த ரூமுக்குள் பீரோ இருந்தது.. கட்டில், ஷோபா போடப்பட்டிருந்தது.. எங்குமே யாருமே தென்படவில்லை.. இறுதியாக, கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தார் ராமச்சந்திரன்.. அப்போது, ஏதோ செல்போன் வெளிச்சம் போல அங்கு தென்பட்டது.. பிறகு, தன்னுடைய கையை கட்டிலுக்கு அடியில் விட்டு பார்த்தபோதுதான், சுபாஷ் சிக்கினார்.. கட்டிலை இழுத்து போட்டுவிட்டு, சுபாஷை வெளுத்து கட்டினார் ராமச்சந்திரன்… இந்த சத்தம் கேட்டு, ஓடிவந்து சுபாஷை அடித்து நொறுக்கி உள்ளார்கள்.. போலீசுக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து காயமடைந்த சுபாஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்..

சுபாஷ் திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவராம்.. இதுவரை அந்த ரிசார்ட்டில் ஏகப்பட்ட பெண்கள் வந்து தங்கி சென்றிருக்கிறார்களாம்.. பலர் குடும்பம், குழந்தைகளுடன் வந்து தங்கியிருக்கிறார்கள்.. இந்த பெண்கள் குளிக்கும்போது, அதைஎல்லாம் வீடியோவாக எடுத்து தன்னுடைய செல்போனில் வைத்திருக்கிறாராம் சுபாஷ்.. இதைதவிர நிறைய ஆபாச வீடியோக்களும் இருந்திருக்கின்றன.. இந்த ரிசார்ட்டை பொறுத்தவரை, அறையின் உட்பக்கம் தாழிட்டு கொண்டாலும், வெளியில் இருந்தும் கதவை திறக்க முடியுமாம்.. ஆனால், இந்த விஷயம் இங்கு வந்து தங்கும் நபர்கள் யாருக்கும் தெரியாது. அதாவது, உருண்டை வடிவிலான லாக் சிஸ்டம் இருக்கிறது.. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறையை வைத்திருக்கிறார்களாம்..

கைதாகி உள்ள சுபாஷ், இங்குள்ள அறைகளை சுத்தம் செய்யும் ஊழியர் என்பதால், கதவை எளிதாக திறந்து அடிக்கடி வந்திருக்கிறார். சம்பவத்தன்றுகூட, இளம்பெண் படுக்கையில் இருந்ததை செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோதுதான், வசமாக சிக்கிவிட்டார்.. நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, கல்பாக்கம் பகுதி மக்கள் திரண்டு வந்துவிட்டார்களாம்.. அதற்கு பிறகுதான் விஷயத்தை சொல்லி, அவர்களை கலைந்துசெல்ல வைத்துள்ளனர் போலீசார். விசாரணை இன்னமும் தொடர்ந்து சுபாஷிடம் நடந்து கொண்டிருக்கிறது.
