“நான் என்ன ஸ்டாலினையா சந்தித்தேன் ? சசிகலாவை தான் சந்தித்தேன் என்னை கட்சியில் இருந்து தூக்க இவர்கள் யார்” – ஓ பன்னிர்செல்வம் சகோதரர்

சசிகலாவை சந்தித்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட தனது சகோதரர் ராஜாவை ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கினார்.

நேற்று திருச்செந்தூர் வந்த சசிகலாவை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரரும் மற்றும் தேனி மாவட்ட அதிமுக பிரமுகருமான ஒ ராஜா அவர்கள் சென்று இருந்தார். அப்போது அந்தக் கூட்டத்தில் யார் யார் அதிமுகவினர் சசிகலாவை சந்திக்க சென்றார்களோ, அவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

அதில் அதிர்ச்சி அடைந்த ராஜா, “தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்கள் 2 பேரும் கட்சியை என்ன செய்தார்கள் ? எந்தவிதமான முன்னேற்றமும் செய்யவில்லை, கட்சி இப்போது டம்மியாக இருக்கிறது தொண்டர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். சசிகலாவால் மட்டும்தான் அதிமுகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்” என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர் “நான் என்ன ஸ்டாலினையா சந்தித்தேன் ? சசிகலாவை தானே சந்தித்தேன். என்னை ஏன் கட்சியிலிருந்து தூக்கினார்கள். என்னை கட்சியிலிருந்து தூக்க இவர்கள் யார் என்னுடைய பொதுச்செயலாளர் எப்போதுமே சசிகலாதான்” என்றார்.

Spread the love

Related Posts

Viral Video | கஞ்சா இழுத்த மகனை கம்பத்தில் கட்டி வைத்து மிளகாய் போடி தடவி தண்டனை கொடுத்த தாய் | அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தில் கோடாட் என்ற பகுதியில் 15 வயது சிறுவன் கஞ்சா பயன்படுத்தியதை

“என்னுடைய இறப்பிற்கு போலீஸ் தான் காரணம்” என வீடியோவில் உருக்கமாக பேசி தற்கொலை செய்து கொண்ட மாணவன்

புதுச்சேரியில் மாணவன் ஒருவன் என்னுடைய இறப்பிற்கு போலீசார் காரணம் என வீடியோ பதிவிட்டு இறந்த சம்பவம்

நடிகர் அஜித் கேதார்நாத் கோவிலுக்கு சென்றதை பதிவிட்டு மத ரீதியாக அஜித்தை சம்மந்தப்படுத்தி பேசியதாக ட்விட்டரில் சர்ச்சை

ட்விட்டரில் பயனர் ஒருவர் நடிகர் அஜித்குமார் கேதார்நாத் கோவிலுக்கு சென்று வந்ததை பதிவிட்டு, இந்து மத