மத்திய நிதியமைச்சறும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் மகள் வான்மதிக்கு பெங்களூருவில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் வான்மதி மற்றும் மணமகன் பிரதிக் ஆகியோருக்கு எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உடுப்பி அதமாறு மடத்தின் விஷ்வ பிரிய தீர்த்த சுவாமிகள் ஈச பிரிய தீர்த்த சுவாமிகள் மணமக்களை வாழ்த்தி கிருஷ்ணர் கோவில் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். வழக்கமாக அரசியல் தலைவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலையில் மத்திய நிதி அமைச்சரது மகளின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது கவனம் ஈர்த்துள்ளது.
Union Finance Minister Nirmala Sitharaman's daughter got married in Bangalore yesterday. This news never appeared in any Tamil or English media. pic.twitter.com/9bgTzLZiNr
— Anil_Jacob_IV🇮🇳 (@follow_amj) June 8, 2023
