நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதற்கு வாய்ப்பே கிடையாது இவர்கள் போய் நாடகம் நடத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டி காட்டி அதை ரத்து செய்ய திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப்பேரவையில் மூன்று முறை நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இரண்டு முறை அது நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது முறை அதை நிறைவேற்ற முற்பட்ட திமுக அளித்த அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் இன்னும் அனுப்பவில்லை என்ற தகவலும் வந்துள்ளது.
இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நீட்தேர்வு எப்போதும் போல கட்டாயம் நடக்கும் நீட்தேர்வு நிறுத்தி விடுவோம் என்று இவர்கள் பொய் சொல்லி டிராமா நடத்தி வருகின்றனர். இந்த நீட் தேர்வினால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை ஏழை எளிய மாணவர்களுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் இதன்மூலம் நடைபெறப் போவதில்லை. அப்படி ஏதாவது மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசிடம் கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை என அவர் தெரிவித்தார். எனவே தமிழகத்தில் நீட் தேர்வு நடப்பதில் மாற்றுக்கருத்தே இல்லை என கூறினார்.