நேற்று நடந்த பைனல் போட்டி தான் உலகளவில் அதிகமான பார்வையாளர்களை கொண்ட போட்டியாக அமைந்திருக்கிறது.
நேற்று சென்னைக்கும் குஜராத்துக்கும் இடையே நடந்த ஐபிஎல் பைனல் போட்டியில் கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்து சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனால் தொடர்ந்து ஐந்து முறை கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் இந்த இரண்டு அணிகளும் தற்போது அதிக கோப்பைகளை வென்ற அணியாக திகழ்கிறது. அதன்படி இரண்டு கோப்பைகளை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், ஒரு கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் அணி முறையே மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

இந்த போட்டியில் லைவ் ஸ்ட்ரீமிங் உரிமத்தை ஜியோ சினிமா நிறுவனம் பெற்றது. இந்த ஐபிஎல் தொடக்கத்தில் இருந்தே ஒரு நல்ல எதிர்பார்ப்பு மக்களிடமிருந்தது சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் ஏகப்பட்ட ஐபிஎல் போட்டியை பார்க்க லைவ் ஸ்ட்ரீமிலும் சரி ஸ்டேடியத்திலும் சரி மல மல ரசிகர்கள் குவிந்தனர். ஏனென்றால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறை எல்லா அணிகளும் தங்களுடைய ஹோம் கிரவுண்ட் என்ன சொல்லப்படும் அவர்களுடைய சொந்த ஊரில் விளையாடுகின்றனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இந்த ஐபிஎல் ஐ கண்டு களித்தனர்.
தற்போது நேற்று நடந்த இந்த ஆட்டத்தின் மூலம் உலகத்திலேயே லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் அதிக பார்வையாளர்கள் பார்த்த போட்டியாக இது அமைந்திருக்கிறது. மொத்தமாக நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியை 3.3 மில்லியன் அதாவது 33 கோடி பார்வையாளர்கள் ஜியோ சினிமாவில் லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் பார்த்திருக்கிறார்கள். இதுவே தற்போது அதிக பார்வையாளர்களைக் கொண்ட போட்டியாக உலக அளவில் அமைந்திருக்கிறது என தகவல் வெளிவந்திருக்கிறது.
