கோயிலுக்குள் நைட்டி போட்டு வந்ததை தடுத்த அர்ச்சகரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை மண்டலத்தில் கிருஷ்ணா நகர் பகுதிகளில் ஸ்ரீ சீதா ராமச்சந்திர கோயில் அமைந்துள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது இந்த கோவிலின் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய அங்கு வந்திருந்த பெண் கவுன்சிலர் மஞ்சுளா நைட்டி அணிந்து சென்றதாக தெரிகிறது. அதனை கோவில் அர்ச்சகராக இருந்து பணியாற்றி வந்த கண்ணன் எதிர்க்கும் போது பெண் கவுன்சிலர் மஞ்சுளா அவரை ஒருமையில் திட்டி பேசியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் கண்ணன் கோவிலுக்குள் நைட்டி போன்ற ஆடைகள் எல்லாம் அணிந்து வரக்கூடாது. முறையான ஆடைகளை அணிந்து கொண்டு தான் வரவேண்டும். நீங்கள் நைட்டி போட்டு வருகிறீர்கள் நான் எப்படி இதை கண்டிக்காமல் இருக்க முடியும் ? இது கோயில் ஆகமத்திற்கு எதிரானது எனக்குறியிருக்கிறார். இதையடுத்து கவுன்சிலரின் ஆதரவாளர்கள், கண்ணனை இந்த விஷயத்துக்காக தாக்க முற்பட்டனர். அந்த நேரத்தில் ஆகமங்கள் குறித்து பேசும் ஆற்றல் பெட்ரா கண்ணன் ஏன் ஆகம விதிகளுக்கு முரணாக கோவிலில் 12 மணி வரை திறந்து வைத்திருக்கிறார். என அர்ச்சகருக்கு எதிராக ஒரு மனுவை கொடுத்திருக்கிறார் கவுன்சிலர் மஞ்சுளா.
ஆணை வழுக்கை என கூறினால் அது பாலியல் சீண்டலுக்கு ஈடான குற்றம் என தீர்ப்பு

அதன் அடிப்படையில் அர்ச்சகர் கண்ணன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலர் மஞ்சுளா தன்னை புறக்கணிக்க பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்வதாகவும் அர்ச்சகர் கண்ணன் வீடியோக்களை பதிவிட்டு நியாயம் கேட்டு வருகிறார். அதே போல தன்னை சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும் அர்ச்சகர் கேட்டுக் கொண்டு வருகிறார்.
மேலும் இந்த குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது நான் எப்போது கோவிலை அப்படி திறந்து வைத்திருந்தேன் யாருக்காக இரவு 12 மணிவரை கோவிலை திறந்து வைத்திருந்தேன் என்று அதில் கூற வில்லை என்பதால் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் இடை நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மனு தொடர்பாக ஜூன் 1-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கோவில் செயல் அலுவலர் மற்றும் திமுக கவுன்சிலர் ஆகியோர்க்கு உத்தரவிட்டுள்ளார்.
